Sunday, August 16, 2015

கூடாத செயல்கள் எவை?

இந்து சமயம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சில கூடாத செயல்களைச் சொல்லி சில வழிமுறைகளையும் காட்டுகின்றன. அவை;
ஆண்களுக்கு
1. புகை, மது போன்றவை கூடாது.
2. தெரியாத தொழிலைச் செய்யக் கூடாது.
3. நாணயம் கெட்டவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது.
4. வரவுக்கு மேல் செலவு செய்யக் கூடாது.
5. மொத்த வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கு சேமிக்க வேண்டும். 2 சதவிகிதமாவது தரும காரியங்களுக்குச் செலவிட வேண்டும்.
6. பல வருடங்கள் நம்பிக்கையாய் இருந்தவனை திடீரென்று சந்தேகிக்கக் கூடாது.
7. ஒருவனைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் புகழ்ந்து பேசி விடக் கூடாது.
8. ஞாபகசக்தி, விரைவில் கிரகிக்கும் தன்மை, உயர்ந்த மனோபாவம், சரள சுபாவம், நேர்மை, மெய்மை, தரியம், நிதானம் ஆகிய குணங்கள் உங்கள் தொழிலில் வெற்றியடைய இன்றியமையாதவை.
9. அளவுக்கு மிஞ்சிய தூக்கம், அவசியமில்லாத பயம், ஆத்திரம், சோம்பல், எக்காரியத்தையும் தாமதமாகவே செய்யும் நடைமுறை இவைகள் உங்கள் முன்னேற்றத்தின் தடைகள்.
பெண்களுக்கு
1. பெண்கள் இரவில் விளக்கு வைத்தவுடன் அழக் கூடாது.
2. காலை ஆட்டக் கூடாது. மலலாந்து படுக்கக் கூடாது.
3. விளக்கு வைத்த பின் வளையல்களைக் கழற்றக் கூடாது.
4. திருமணம் ஆன பெண்கள் கைகளில் வளையல் அணியாமல் உணவு பரிமாறக் கூடாது.
5. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வீட்டை விட்டுச் சென்றால் இரவு வீடு திரும்பி விட வேண்டும். அன்று பிறர் வீடுகளில் தங்கக் கூடாது.
6. காய்கறிகளையோ, அன்னைத்தையோ கைகளால் பரிமாறக் கூடாது.
7. தலையை விரித்துப் போட்டு உட்காரக் கூடாது.
8. தம்பதிகளைக் கூட விடாமல் தடுப்பது மகாபாவம்.
9. கன்னிப் பெண்கள் சாந்துப் பொட்டையே வைத்துக் கொள்ள வேண்டும். திருமணம் ஆன பெண்கள்தான் குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment