1. மாட்டுச் சாணத்தை வீட்டில் ஏன் மெழுகச் சொன்னார்கள்?
மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகுவதால், வெளியிலிருந்து வரும், தவறான உணர்வுகளின் நஞ்சானது அடக்கப்படுகின்றது.
நாம் வெளியே எங்கே சென்றாலும், அங்கே விஷ அணுக்களின் தன்மை பரவிப் படர்ந்துள்ளது. அவைகள் நம் பாதங்களில் பட்டவுடன், நமது உடலில் சேர்கின்றது அந்த உணர்வின் வலிமையை நுகர்ந்தால், நமக்குள் அது வலிமை பெறுகின்றது.
விஷத்தின் உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்தாலும்,
வாசனையுள்ள சாணத்தின் மீது நமது பாதம் பட்டபின்,
நமக்குள் விஷத்தை ஒடுக்கும் ஆற்றலைப் பெறுகின்றோம்.
வாசனையுள்ள சாணத்தின் மீது நமது பாதம் பட்டபின்,
நமக்குள் விஷத்தை ஒடுக்கும் ஆற்றலைப் பெறுகின்றோம்.
ஏனென்றால், மாடு விஷத்தின் தன்மையைத் தன் உடலாக்கியபின், விஷத்தை நீக்கிய நல்ல உணர்வின் தன்மையாக, மாட்டின் சாணம் வெளிப்படுகின்றது. ஆகவே, விஷத்தை ஒடுக்கும் வல்லமை மாட்டின் சாணத்திற்கு உண்டு.
ஆகையால், ஞானிகள் “மாட்டின் சாணத்தை வீட்டில் தெளி” என்றார்கள். மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகினால், நம்மால் வெளியிடப்பட்டு, வீட்டில் பதிந்துள்ள சங்கடம், சலிப்பு, வேதனை, போன்ற உணர்வுகளை அது கொல்கின்றது.
2. எந்த எண்ணத்துடன் கோலம் போடவேண்டும்?
அதே மாதிரி வீடுகளில் கோலம் போடுவார்கள். இது சாஸ்திரங்கள் நமக்காக உருவாக்கிக் கொடுத்த வழிமுறை. கோலம் எதற்காகப் போடுகிறார்கள்? பல புள்ளிகளை வைத்து இணைத்துப் பார்க்கிறார்கள்.
கோலப்பொடி தயாரிக்கப் பயன்படும் கற்கள் காந்தப் புலன்கள் கொண்டது. காந்தப் புலன்கள் கொண்ட, கோலப்பொடியைக் கொண்டு கோலமிடும் பொழுது, நாம் எண்ணுகின்ற உணர்வுகள், கோலப் பொடியில் கலந்து விடுகின்றது.
வீட்டில் வெறுப்பாக இருப்பார்கள். சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆக, இந்த வெறுப்பின் உணர்வுடன், கோலப்பொடியைக் கையில் எடுத்தோம் என்றால், அதிலிருக்கும் காந்த சக்தி நமது வெறுப்பின் உணர்வை அது கவர்ந்து கொள்ளும்.
நாம் நமது வீட்டில் கோலப்பொடி வைத்திருக்கிறோம். மற்ற எல்லாவற்றையும் வைத்திருக்கிறோம். ஆனால், மாமியார் மீது வெறுப்பு, மாமனார் மீது வெறுப்பு, கணவர் மீது வெறுப்பு என்று மனதில் வெறுப்பு கொண்டு, புள்ளி வைத்தால் எப்படியிருக்கும்?
இந்த உணர்வுடன் கோலமிடத் தொடங்கினால், என்னாகும்? அது ஒழுங்காக வராது. அழித்து அழித்துக் கோலம் போட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் சந்தோசமாக இருப்பவர்கள், ஒரு புள்ளியை வைத்தால், தொடர்ந்து அழகாகக் கோடு இழுத்துக் கொண்டே போவார்கள்.
ஆனால் சந்தோசமாக இருப்பவர்கள், ஒரு புள்ளியை வைத்தால், தொடர்ந்து அழகாகக் கோடு இழுத்துக் கொண்டே போவார்கள்.
ஆக, இதையெல்லாம் மாற்றியமைப்பதற்காக தன் குடும்பத்தின் மீது, பற்றும் பாசமும் கொள்ளும் பொழுது, மகிழ்ச்சியான உணர்வின் தன்மையை உருவாக்கும் ஆற்றல் வருகின்றது.
குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒன்று சேர்ந்து வாழவேண்டும் என்று எண்ணி
கோலப் பொடியை எடுத்து, புள்ளிகளை வைத்துக் கோலமிடும் பொழுது, நம்முடைய நிலைகளும் ஒன்றுபடும் தன்மை வருகின்றது.
கோலப் பொடியை எடுத்து, புள்ளிகளை வைத்துக் கோலமிடும் பொழுது, நம்முடைய நிலைகளும் ஒன்றுபடும் தன்மை வருகின்றது.
ஆக, நமக்குள் வேற்றுமை இல்லாத நிலைகள் கொண்டு, அனைவரையும் அரவணைக்கும் தன்மை வர வேண்டுமென்ற எண்ணத்தால், நமது குடும்பத்தின் மீது பற்றும் பாசமும் வரவேண்டும், இணைந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வுகளை எண்ணித்தான், இங்கு கோலமிட வேண்டும்.
ஆக, சாஸ்திரங்கள் காண்பித்த தத்துவங்கள் பொய்யல்ல. நாம் தெளிவாக இதையெல்லாம் தெரிந்து அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் மகிழ்ந்து வாழ்வோம்.
No comments:
Post a Comment