Thursday, August 13, 2015

ஒரு ஆரோக்ய குறிப்பு -நாவல் பழம்



நாவல் மரத்தின் பட்டை, நாவற்பழம்,விதை, இலை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது ஆகும்.நாவல் மருத்துவ மூலிகைப் பயன்பாடுடையது. சிறுநீர் எரிச்சல், சிறுநீர்க்கட்டு போக்க இம்மூலிகை பயன்படுகிறது. நீரிழிவு நோய்க்கு இம்மரத்தின் விதைகள் மருந்தாகப் பயன்படுகின்றன. நாவற்பழங்கள் உடல் சூட்டைக் குறைக்க பயன்படுகின்றன. இப்பழங்கள் கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், இரத்தத்துடன் கூடிய பேதி ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இப்பழமும், இப்பழத்தின் காயவைத்து அரைத்த பொடியும் சர்கரை நோயை குணப்படுத்த வல்லதாகும். நாவற்பழம் உடல் சூட்டினால் ஏற்படும் நீர்சுருக்கினையும் குணமாக்குகின்றது. அல்சர், பெண்களுக்கு வெள்ளைப்படுதல், கர்பப்பை கோளாறுகள், இரத்தப்போக்கு, புற்றுநோய் ஆகியவற்றுக்கும் மருந்தாக இவை பயன்படுகின்றன

No comments:

Post a Comment