Thursday, August 27, 2015

சிறுநீரகக் கற்கள் வராமல் இருக்க..!



தினமும் குறைந்தது இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக நீர்ச் சத்து நிறைந்த காய்கறி, பழங்களைச் சாப்பிடவேண்டும். கால்சியம் ஆக்சலேட், கால்சியம் பாஸ்பேட் ஆகிய உப்புக்கள்தான் சிறுநீரகக் கற்கள் உருவாக முக்கியக் காரணங்கள். எனவே, இவை உருவாக அதிக வாய்ப்புள்ள மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியைக் கூடுமானவரை தவிர்க்கலாம்.
சிறுநீரகக் கல் வந்துவிட்டால், என்ன செய்ய வேண்டும்..?!
உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். பழச்சாறு, இளநீர், வாழைத்தண்டு சாறு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாழைத்தண்டு சாறில் நார்ச் சத்தும் அதிக அளவில் உடலுக்குத் தேவையான தாது உப்புக்களும் உள்ளன. இவை சிறுநீர் கழிப்பைத் தூண்டும். இதனால், சிறிய சிறிய கற்கள் எல்லாம் வெளியே தள்ளப்படும். எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் அமிலப் பழங்களின் ஜூஸ் குடிப்பதன் மூலம், அது சிறுநீரில் அமிலத் தன்மையைக் குறைத்து கல் உருவாவதைத் தடுக்கும். ஒருவருக்கு ஒரு முறை சிறுநீரகக் கற்களை அகற்றிவிட்டாலும் அடுத்த ஐந்து வருடங்களில் திரும்ப வருவதற்கு 50 சதவிகித வாய்ப்பு உண்டு. அதனால், அவர்கள் கூடுதல் எச்சரிக்கையோடு இருத்தல் நலம்!

No comments:

Post a Comment