Saturday, August 15, 2015

சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம், விவசாயிகள் விடுதலைக் கழகம்.




உங்கள் கிராமத்தை நாங்கள் தத்தெடுத்து , சீமை கருவேலமரத்தை அழித்து , நல்ல மரங்கள் நட்டு , பராமரித்து தருகின்றோம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது.
1. உங்கள் மின்னஞ்சல் மற்றும் பெயரினை 7806919891 என்ற வாட்சப் எண்ணிற்கு அனுப்பவும்.
2. உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பப்படும். அதை அச்சு (பிரிண்ட்) எடுத்துக்கொள்ளவும்.
3. விண்ணப்ப பெறுநரில் " கிராம தலைவர் மற்றும் பொதுமக்கள் , கிராம முகவரியை நிரப்பவும்.
4. கீழே இப்படிக்கு என்ற இடத்தில் கிராம தலைவர் முத்திரை (சீல்) இட்டு கையெழுத்து வாங்கவும்.
5. விண்ணப்பத்தின் பின்புறம் மக்களின் கையெழுத்து பெறவும்.
6. அதை புகைப்படம் எடுத்து வாட்சப் எண்ணிற்கு அனுப்பவும். அல்லது விண்ணப்பத்தை ஸ்கேன் செய்து aaproject.tn@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
7. அனுப்பிய பிறகு உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாக பெறப்பட்டவுடன் MM-AAPROG என்ற பெயரில் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
8. பெறப்பட்ட ஒருவார காலத்திற்குள் உங்கள் கிராமத்தில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம், விவசாயிகள் விடுதலைக் கழகம்.
www.aaproject.org
(தகவலை அனைத்து தளங்களிலும் பகிர்ந்து உதவவும் நன்றி)

No comments:

Post a Comment