Monday, August 31, 2015

63 நாயன்மார்கள்

01.பெயர் : திருநீலகண்டர்
பிறந்த ஊர்: சிதம்பரம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை, கார்த்திகை
முக்தி மாதம், நட்சத்திரம் : மார்கழி, உத்திரம்
02.பெயர் : இயற்பகையார்
பிறந்த ஊர்: பூம்புகார்
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் : மார்கழி, உத்திரம்
03. பெயர் : இளையான்குடி மாறனார்
பிறந்த ஊர்: இளையான்குடி (சிவகங்கை)
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆடி, சதயம்
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆவணி, மகம்
04. பெயர் : மெய்ப்பொருளார்
பிறந்த ஊர்: திருக்கோவிலூர் (விழுப்புரம்)
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆடி, அஸ்தம்
முக்தி மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, உத்திரம்
05.பெயர் : விறல்மிண்டர்
பிறந்த ஊர்: செங்குன்றூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆவணி, மூலம்
முக்தி மாதம், நட்சத்திரம் : சித்திரை, திருவாதிரை
06.பெயர் : அமர்நீதியார்
பிறந்த ஊர்: பழையாறை
பிறந்த மாதம், நட்சத்திரம் : மார்கழி, சித்திரை
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆனி, பூரம்
07.பெயர் : எறிபத்தர்
பிறந்த ஊர்: கரூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : வைகாசி, பரணி
முக்தி மாதம், நட்சத்திரம் : மாசி, அஸ்தம்
08.பெயர் : ஏனாதி நாயனார்
பிறந்த ஊர்: எயினனூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : பங்குனி, பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, உத்திராடம்
09.பெயர் : கண்ணப்பர்
பிறந்த ஊர்: உடுப்பூர்(ஆந்திரா)
பிறந்த மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் : தை, மிருகசீரிடம்
10.பெயர் : குங்கிலியக்கலயர்
பிறந்த ஊர்: திருக்கடையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆடி, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆவணி, மூலம்
11.பெயர் : மானக்கஞ்சாறர்
பிறந்த ஊர் : கஞ்சாறூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மாசி, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் : மார்கழி, சுவாதி
12.பெயர் : அரிவட்டாயர்
பிறந்த ஊர் : கணமங்கலம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆனி, கேட்டை
முக்தி மாதம், நட்சத்திரம் : தை,திருவாதிரை
13.பெயர் : ஆரையர்
பிறந்த ஊர் : திருமங்கலம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, அஸ்தம்
14.பெயர் : மூர்த்தி நாயனார்
பிறந்த ஊர் : மதுரை
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, விசாகம்
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி, கார்த்திகை
15.பெயர் : முருகர்
பிறந்த ஊர் : திருப்புகலூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, கார்த்திகை
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி, மூலம்
16.பெயர் : உருத்திரபசுபதி
பிறந்த ஊர் : திருத்தலையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, அஸ்வினி
17.பெயர் : திருநாளைப்போவார்
பிறந்த ஊர் : ஆதனூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மார்கழி, சித்திரை
முக்தி மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, ரோகிணி
18.பெயர் : திருக்குறிப்புத்தொண்டர்
பிறந்த ஊர் : காஞ்சிபுரம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை, அனுஷம்
முக்தி மாதம், நட்சத்திரம் : சித்திரை, சுவாதி
19.பெயர் : சண்டேசுவரர்
பிறந்த ஊர் : திருச்சேய்ஞலூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : வைகாசி, திருவாதிரை
முக்தி மாதம், நட்சத்திரம் : தை, உத்திரம்
20.பெயர் : திருநாவுக்கரசர்
பிறந்த ஊர் : திருவாமூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : பங்குனி, ரோகிணி
முக்தி மாதம், நட்சத்திரம் : சித்திரை, சதயம்
21. பெயர் : குலச்சிறையார்
பிறந்த ஊர் : மணமேற்குடி
பிறந்த மாதம், நட்சத்திரம் :கார்த்திகை, மூலம்
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி, சித்திரை
22. பெயர் : பெருமிழலைக்குறும்பர்
பிறந்த ஊர் : பெருமிழலை
பிறந்த மாதம், நட்சத்திரம் : மாசி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி, சித்திரை
23. பெயர் : காரைக்கால் அம்மையார்
பிறந்த ஊர் : காரைக்கால்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆவணி, கார்த்திகை
முக்தி மாதம், நட்சத்திரம் : பங்குனி, சுவாதி
24. பெயர் : அப்பூதி அடிகள்
பிறந்த ஊர் : திங்களூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மார்கழி, பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் : தை, சதயம்
25. பெயர் : திருநீலநக்கர்
பிறந்த ஊர் : சாத்தமங்கை
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆடி, பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி, மூலம்
26. பெயர் : நமிநந்தி அடிகள்
பிறந்த ஊர் : எமப்பேரூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, உத்திரம்
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி, பூசம்
27. பெயர் : திருஞானசம்பந்தர்
பிறந்த ஊர் : சீர்காழி
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை, திருவாதிரை
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி, மூலம்
28. பெயர் : ஏயர்கோன் கவிக்காமர்
பிறந்த ஊர் : பெருமங்கலம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆனி, கார்த்திகை
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆனி, ரேவதி
29. பெயர் : திருமூலர்
பிறந்த ஊர் : சாத்தனூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : வைகாசி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, அஸ்வினி
30. பெயர் : தண்டியடிகள்
பிறந்த ஊர் : திருவாரூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, விசாகம்
முக்தி மாதம், நட்சத்திரம் : பங்குனி, சதயம்
31. பெயர் : மூர்க்கர்
பிறந்த ஊர் : திருவேற்காடு
பிறந்த மாதம், நட்சத்திரம் : மார்கழி, புனர்பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி, ஆயில்யம்
32. பெயர் : சோமாசிமாறர்
பிறந்த ஊர் : திருஅம்பர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மாசி, மகம்
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி, ஆயில்யம்
33. பெயர் : சாக்கியர்
பிறந்த ஊர் : காஞ்சிபுரம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, திருவோணம்
முக்தி மாதம், நட்சத்திரம் : மார்கழி, பூராடம்
34. பெயர் : சிறப்புலியார்
பிறந்த ஊர் : திருஆக்கூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, அவிட்டம்
முக்தி மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, பூராடம்
35. பெயர் : சிறுத்தொண்டர்
பிறந்த ஊர் : திருச்செங்காட்டங்குடி
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் : சித்திரை, பரணி
36. பெயர் : கழறிற்றறிவார் (சேரமான் பெருமாள்)
பிறந்த ஊர் : திருஅஞ்சைக்களம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை, ரேவதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி, சுவாதி
37. பெயர் : கணநாதர்
பிறந்த ஊர் : சீகாழி
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆனி, ரேவதி
முக்தி மாதம், நட்சத்திரம் : பங்குனி, திருவாதிரை
38. பெயர் : கூற்றவர்
பிறந்த ஊர் : திருக்களந்தை
பிறந்த மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, உத்திரட்டாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி, திருவாதிரை
39. பெயர் : புகழ்ச்சோழர்
பிறந்த ஊர் : உறையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி, கார்த்திகை
40. பெயர் : நரசிங்க முனையரையர்
பிறந்த ஊர் : திருநாவலூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மாசி, ரோகிணி
முக்தி மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, சதயம்
41. பெயர் : அதிபத்தர்
பிறந்த ஊர் : நாகை
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, ரேவதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆவணி, ஆயில்யம்
42. பெயர் : கலிக்கம்பர்
பிறந்த ஊர் : பெண்ணாகடம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மார்கழி, பூரட்டாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : தை, ரேவதி
43. பெயர் : கலியர்
பிறந்த ஊர் : திருவொற்றியூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : வைகாசி, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி, கேட்டை
44. பெயர் : சத்தியார்
பிறந்த ஊர் : வரிஞ்சையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மாசி, ரேவதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, பூசம்
45. பெயர் : ஐயடிகள் காடவர்
பிறந்த ஊர் : காஞ்சி
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, உத்திராடம்
46. பெயர் : கணம்புல்லர்
பிறந்த ஊர் : இருக்குவேளூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : பங்குனி, சதயம்
முக்தி மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, கார்த்திகை
47. பெயர் : காரி
பிறந்த ஊர் : திருக்கடவூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : வைகாசி, அஸ்தம்
முக்தி மாதம், நட்சத்திரம் : மாசி, பூராடம்
48. பெயர் : நின்றசீர் நெடுமாறனார்
பிறந்த ஊர் : மதுரை
பிறந்த மாதம், நட்சத்திரம் : பங்குனி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, பரணி
49. பெயர் : வாயிலார்
பிறந்த ஊர் : மயிலாப்பூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : பங்குனி, உத்திரட்டாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : மார்கழி, ரேவதி
50. பெயர் : முனையடுவார்
பிறந்த ஊர் : நீடூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, மகம்
முக்தி மாதம், நட்சத்திரம் : பங்குனி, பூசம்
51. பெயர் : கழற்சிங்கர்
பிறந்த ஊர் : காஞ்சி
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி, பரணி
52. பெயர் : இடங்கழி
பிறந்த ஊர் : கொடும்பாளூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆவணி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, கார்த்திகை
53. பெயர் : செருத்துணையார்
பிறந்த ஊர் : கீழைத்தஞ்சை
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, உத்திரட்டாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி, சுவாதி
54. பெயர் : புகழ்த்துணை
பிறந்த ஊர் : செருவிலிபுத்தூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை, சதயம்
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆவணி, ஆயில்யம்
55. பெயர் : கோட்புலியார்
பிறந்த ஊர் :நாட்டியத்தான்குடி
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆனி, திருவாதிரை
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி, கேட்டை
56. பெயர் : பூசலார்
பிறந்த ஊர் : திருநின்றவூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆவணி, பூரம்
முக்தி மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, அனுஷம்
57. பெயர் : மங்கயைர்க்கரசியார்
பிறந்த ஊர் : பாழையாறை
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, சதயம்
முக்தி மாதம், நட்சத்திரம் : சித்திரை, ரோகிணி
58. பெயர் : நேசர்
பிறந்த ஊர் : காம்பீலி
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆனி, பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் : பங்குனி, ரோகிணி
59. பெயர் : கோச்செங்கட்சோழர்
பிறந்த ஊர் :உறையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, மிருகசீரிடம்
முக்தி மாதம், நட்சத்திரம் : மாசி, சதயம்
60. பெயர் : நீலகண்ட யாழ்ப்பாணர்
பிறந்த ஊர் : எருக்கத்தம்புலியூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, விசாகம்
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி, மூலம்
61. பெயர் : சடையனார்
பிறந்த ஊர் : திருநாவலூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆடி, புனர்பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் : சித்திரை, சித்திரை
62. பெயர் : இசைஞானியார்
பிறந்த ஊர் : திருவாரூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, மூலம்
முக்தி மாதம், நட்சத்திரம் : சித்திரை, சித்திரை
63. பெயர் : நம்பி ஆரூரர் (சுந்தரர்)
பிறந்த ஊர் : திருநாவலூர் ர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆவணி, உத்திரம்
முக்தி மாதம், நட

Sunday, August 30, 2015

கைகொடுத்த காரிகை: மங்கையர்க்கரசியார்

மங்கையர்க்கரசியார்
ஒருநாடு நீர்வளமும் நில வளமும் நிரம்பப் பெற்றிருந்தால் மட்டும் போதாது. நாட்டில் கலவரங்கள் ஏதும் நிகழாமல் அமைதிப் பூங்காவாகவும் இருக்க வேண்டும். முக்கியமாக மத, இனக் கலவரங்கள் நிகழாமல் இருக்க வேண்டும். நாட்டை ஆளும் மன்னர்கள் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஆனால் மன்னனே மதம் மாறி ஒருபக்கமாகச் சாய்ந்தால், நாடு என்னவாகும்? நாட்டில் குழப்பங்கள் எழுவதைத் தடுக்க முடியாது. இதுதான் பாண் டிய நாட்டில் நிகழ்ந்தது. பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் சைவ சமயத்திலிருந்து சமண சமயத்திற்கு மாறி சமணர்களோடு சேர்ந்தான். அரசன் எவ்வழி அவ்வழி மக்கள் என்பதற்கேற்ப, மக்களும் மன்னனைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள். இதனால் பாண்டிய நாட்டிலிருந்த கோவில்களெல்லாம் பாழாகி சமணர்களின் பள்ளிகளாக மாறலாயின; சைவர்கள் மிக்க துன்பமடைந்தார்கள்.
இதையெல்லாம் பார்த்த பாண்டி மாதேவியான மங்கையர்க்கரசியார் மிகவும் வேதனையும் கவலையும் அடைந்தாள். நாடும் மக்களும் மன்னனும் இப்படித் திசைமாறிப் போவதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என எண்ணினாள். அதனால் அமைச்சராக இருந்த குலச்சிறையாரிடம் ஆலோசனை செய்தாள்.
சைவம் தழைக்க வந்துதித்த திருஞானசம்பந்தர் திருமறைக்கட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அவர்கள் அறிந்தார்கள். அவரால்தான் பாண்டிய நாட்டையும் மன்னனையும் மக்களையும் சமணர்களிடமிருந்து மீட்க முடியும் என்பதையும் உணர்ந்தார்கள். எனவே ஞானசம்பந்தரிடம் இந்தச் செய்தியைச் சொல்லும்படி தங்களுக்கு வேண்டியவர்களிடம் சொல்லி அனுப்பினார்கள்.
பாண்டிய நாட்டு அரசியும் அமைச்சரும் சொல்லியனுப்பிய செய்தியைக் கேட்ட திரு ஞானசம்பந்தர், திருநவுக்கரசரை அடைந்து, பாண்டிய நாட்டு அரசியும் அமைச்சரும் அழைத்த விஷயத்தைக் கூறினார். இதைக் கேட்ட நாவரசர் திடுக்கிட்டார். சமணர்களின் வஞ்சனையை நன்கறிந்தவர் அல்லவா? “பிள்ளாய்! அந்த சமணர்களின் வஞ்சனையை நான் நன்கறிவேன். நானே அவர்களால் எவ்வளவு கொடுமைகளுக்கு ஆளானேன் தெரியுமா? மேலும் நாளும் கோளும் சரியில்லை.அதனால் தாங்கள் அங்கு செல்வது உசிதமாகத் தோன்றவில்லை” என்றார்.
அதைக் கேட்ட சம்பந்தர் “அப்பரே! நாம் பரவுவது நம் பெருமான் திருவடிகள் என்றால் நாளும் கோளும் நம்மை என்ன செய்யும்? ”…
ஞாயிறு திங்கள் செவ்வாய்
புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே’’
என்று ‘கோளறு பதிகம்’ பாடி நாவரசரை சமாதனம் செய்தார்.
இதன்பின் சம்பந்தர் நமசிவாய மந்திரத்தை ஜபித்த வண்ணம் சிவிகையில் மதுரை நோக்கிச் சென்றார்.
இதேசமயம் மதுரையில் சமணர்களுக்குப் பல தீய சகுனங்கள் தோன்றலாயின. அவர்களுடைய பள்ளிகளிலும், மடங்களிலும் கூகை, ஆந்தைகள் அலறின. எனவே அவர்கள் மன்னனிடம் சென்று தங்கள் தீக்கனவைப் பற்றிக் கவலையோடு தெரிவித்தார்கள்.
மதுரை மாநகரம் முழுவதும் சிவனடியார்கள் மயமாகி விளங்குவதாகவும், மன்னன் கொடிய வெப்பம் மிகுந்த தழலில் வீழ்வது போலவும் கனவு கண்டதாகச் சொன்னார்கள். சிறிய கன்று ஒன்று தங்களை யெல்லாம் விரட்டியடிப்பதாகவும் கனவு கண்டார்களாம். இதையெல்லாம் மன்னனிடம் பதைபதைப்புடன் கூறினார்கள்.
இங்கே பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார்க்கும் குலச்சிறையார்க்கும் நன்னிமித்தங்கள் தோன்றின.
“வண் தமிழ்நாடு செய்தவப்பயன் விளங்க
சைவநெறி தழைத்தோங்க,
பரசமயக் கோளரி வந்தான் வந்தான்”
என்று சின்னங்கள் ஒலிக்க சம்பந்தர் வருவதைக் கேள்விப் பட்ட அரசி, சம்பந்தரை எதிர்கொண்டழைக்க குலச்சிறையாரை அனுப்பினாள். குலச்சிறையாரும் உவந்து சென்று சம்பந்தரை எதிர்கொண்டழைத்து மரியாதைகள் செய்து உபசரித்தார். ஆலவாய் அண்ணல் உறையும் கோயிலைக் கண்ட சம்பந்தர் அண்ணலை வணங்கினார். பின் அரசியைப் பாடினார்.
மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மடமானி
பங்கயச் செல்வி பாண்டிமாதேவி
பணி செய்து நாள்தோறும் பரவப்
பொங்கழலுருவன் பூத நாயகன் நால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவாயாவதும் இதுவே
என்று தொடங்கி பதிகம் பாடினார் அதில் மங்கையர்கரசியின் சிவபக்தியைப் பெரிதும் புகழ்ந்து பாடியிருக்கிறார்.
சம்பந்தர் வந்ததை அறிந்த பாண்டிமாதேவி தானும் சென்று அவரை வரவேற்று சம்பந்தரின் அடிகளில் வீழ்ந்து, “யானும் என் பதியும் என்ன தவம் செய்தோமோ?’’ என்று வணங்கினாள். சம்பந்தரும், “சூழுமாகிய பரசமயத்திடைத் தொண்டு வாழு நீர்மையீர்!’ உமைக் காண வந்தனம்” என்றார். சம்பந்தரும் அவருடன் வந்த அடியவர் களுக்கும் தங்க திருமடம் ஏற்பாடு செய்தார்கள். பாண்டி மாதேவி மிக்க அன்போடு அவர்களுக்கு விருந்தளித்தாள். அடியார்கள் ஓதிய திருப்பதிக ஓசை பொங்கியெழுந்தது.
இரவில் சம்பந்தரும் அடியார்களும் திருப்பதிகங்கள் பாடிய முழக்கத்தைக் கேட்ட சமணர்கள் பொறாமையால் மன்னனிடம் சென்று, சம்பந்தரையும் அவருடைய சீடர்களையும் மதுரையை விட்டு விரட்ட வேண்டும் என்றார்கள். சம்பந்தர் தங்கி யிருக்கும் மடத்திற்குத் தீ வைத்தால் சிறுவனான சம்பந்தன் பயந்து மதுரையை விட்டு ஓடி விடுவான்.” என்றார்கள். இதைக் கேட்ட மன்னனும் சற்றும் யோசிக்காமல் அப்படியே செய்யலாம் என்றான். சமணர்கள் சென்ற பின் மன்னன் கவலையோடு படுக்கையில் சாய்ந்தான். மன்னனுடைய முகவாட்டத்தைக் கண்ட பாண்டிமா தேவி “முகவாட்டம் எதனால் வந்தது?” என்றாள்
“காவிரி நாட்டிலுள்ள சீர்காழி யில் பிறந்த ஒரு சிறுவன், சங்கரன் அருள் பெற்று இங்கு வந்திருக்கிறானாம். இங்குள்ள அமணர்களை வாதில் வெல்லப் போகிறானாம்” என்றான் மன்னன். இதைக் கேட்ட அரசி, “அப்படித் தெய்வத் தன்மை பெற்ற அவர் வாதில் வென்றால், வென்றவர் பக்கம் சேர்வோம்” என்றாள்.
பின் அமைச்சர் குலச்சிறையாருடன் தன் கவலையைப் பகிர்ந்து கொண்டாள் அரசி.
“சமணர்கள் என்ன தீங்கு சூழ்வார்களோ? சம்பந்தருக்குத் தீங்கு ஏதும் வந்து விடக் கூடாது. அப்படி அவருக்குப் பெருந் தீங்கு ஏதும் வந்தால் நாமும் உயிரை விட்டுவிட வேண்டும்” என்றாள்.
இதற்குள் சமணர்கள் தங்கள் மந்திரத்தால் திருமடம் தீப்பற்ற மந்திரம் ஓதினார்கள்.
ஆனால் அது பலிக்கவில்லை. மன்னன் இதையறிந்தால் தங்கள் பெருமை மங்கி விடும் என்று தாங்களே மடத்தில் சென்று அழல் வைத்தார்கள். ஆனால் சிவனடியார்கள் அத் தீயை மேலும் பரவவிடாமல் உடனே அணைத்தார்கள்.
இதை சம்பந்தரிடமும் தெரிவித்தார்கள். இதைக் கேட்ட திரு ஞானசம்பந்தர் மிகவும் வருந்தினார். இந்தத் தவறுக்குக் காரணம் மன்னரின் நிர்வாகமே. மன்னனே பொறுப்பேற்க வேண் டும் என்று நினைத்து அமணர்கள் இட்ட தீத்தழல் போய் ”பையவே சென்று பாண்டியர்க்காகவே” எனப் பாடினார்.
மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணைப் பாதுகாத்தும், அமைச்சர் குலச்சிறையாரின் அன்பினாலும் அரசன்பால் குற்றம் இருந்ததாலும், அவன் மீண்டும் சைவநெறியில் சேரவேண்டும் என்பதாலும் சம்பந்தரின் திருக் கைகளால் திருநீறு பூசும் பேறு பெறப் போவதாலும் ‘பையவே செல்க’ என்றார்.
சம்பந்தரின் வாக்குப்படியே சமணர்கள் இட்ட தீ மன்னனிடம் வெப்பு நோயாக உருவெடுத்தது. மன்னனுக்கு வந்த நோயை அறிந்த அரசியும் அமைச்சரும் மருத்துவர்களை அழைத்து வந்து காட்டினார்கள். ஆனால் மருத்துவர்கள் எவ்வளவோ மருத்துவம் செய்தும் நோய் குறையவேயில்லை; மாறாக அதிகரித்தது.
மன்னன் நோய்வாய்ப்பட்டதை அறிந்த சமணர்கள் நோயின் காரணத்தை உணராமல் தாங்கள் அறிந்த மந்திரங்களைச் சொல்லி மயிற்பீலி கொண்டு மன்னன் உடலைத் தடவினார்கள். ஆனால் அம் மயிற்பீலிகள் எல்லாம் வெப்பத்தால் கருகித் தீய்ந்தன. தங்கள் கெண்டியில் இருந்த நீரைத் தெளிக்க அந்நீர் கொதிநீர் போலப் பொங்கி யது. இதைக் கண்ட மன்னன் ஆத்திரமடைந்து சமணர்களை அந்த இடத்திலிருந்தே விரட்டி விட்டான்.
மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும், சம்பந்தருக்குச் செய்த தீமையின் காரணமாகவே மன்னனுக்கு இந்த நோய் வந்திருக்கிறது என்று தெளிந்து மன்னனிடம் தங்கள் எண்ணத்தை வெளியிட்டார்கள். இந்த நோய் சம்பந்தப் பெருமான் அருளால் தான் குணமாகும் என்றும் உணர்த்தினார்கள்.
எப்படியாவது தன் உடல் வெப்பம் குறைந்தால் போதும் என்று எண்ணிய பாண்டிய மன்னன் ”சம்பந்தர் அருளால் இந்த நோய் தீர்ந்தால் நான் அவர் பக்கம் சேர்வேன். உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் அவரை அழைக்கலாம்” என்றான்.
Mankaiyarkarasi2மன்னனின் துன்பத்தைத் தீர்ப்பதற்காக பாண்டிமாதேவி சிவிகையில் ஏறி சம்பந்தர் இருந்த மடத்திற்குச் சென்றாள். சம்பந்தரைக் கண்டதும், உரை குழறி, மெய் நடுங்கி, என்ன செய்வதென்று தெரியாமல் அடியற்ற மரம் போல் அப்படியே அவர் கால்களில் வீழ்ந்து பணிந்தாள். “ஐயனே! சமணர்கள் செய்த தீததொழில் போய் மன்னனிடம் கொடு வெதுப்பாய் நிற்கிறது. தாங்கள் சமணர்களை வென்று அருளினால் எங்கள் உயிரும் மன்னன் உயிரும் பிழைக்கும்” என்று வேண்டினாள்.
இதைக் கேட்ட சம்பந்தர் “ஆவதும் அழிவதும் எல்லாம் அவன் செயல். நீங்கள் அஞ்ச வேண்டாம். சமணர்களை வாதில் வென்று மன்னவனைத் திருநீறணியச் செய்கிறேன்” என்றார். இதன்பின் அரசி, அமைச்சருடன் அரண்மனை சென்றார் சம்பந்தர். அங்கு மன்னன் இவரைப் பீடத்தில் அமரச் செய்தான். இதனால் சீற்றமடைந்த சமணர்கள் சம்பந்தரை வாதுக்கு அழைத்தார்கள்.
சமணர்களின் கூட்டத்தையும் சீற்றத்தையும், பாலனான சம்பந்தரையும் பார்த்து மங்கையர்க்கரசியார் மிகவும் கவலைப்பட்டாள். ஆனால் சம்பந்தரோ மிகவும் தன்னம்பிக்கையோடு. “தேவி! தாங்கள் கவலைப்பட வேண்டாம். என்னைப் பாலனென்று எண்ண வேண்டாம். இந்தச் சமணர்களை நான் நிச்சயம் வெல்வேன்’’ என்று ஆறுதல் கூறி,
ஆலவாய் அரன் அருளால் இவர்களை வெல்வேன் என்று ஆறுதல் அளித்தார்.
இதன்பின் மன்னனுடைய இடப் பக்கத்தை சமணர்கள் மயிற்பீலி கொண்டு தடவியும், மந்திரித்தும் குணப்படுத்துவதாகவும், மன்னனின் வலப்பக்கத்தைச் சம்பந்தர் திருநீறு கொண்டு தடவியும் ‘நமசிவாய’ மந்திரத்தை ஜபித்தும் குணப்படுத்துவது என்றும் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். சம்பந்தர் அரன் தாளை நினைந்து
‘மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு, சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாய் உமை பங்கன் திரு
ஆலவாயன் திருநீறே’
என்று தொடங்கி பதிகம் பாடி மன்னனின் வலப்பக்கம் திருநீறு பூசினார். திருநீறு பூசப் பூச வெப்பம் படிப்படியாகக் குறைந்து வெப்ப நோய் தீர்ந்தது. ஆனால் இடப்பக்கம் வெப்பம் அதிகமானது. சமணர்களால் மன்னனின் வெப்பத்தைக் குறைக்க முடியவில்லை. நோய் மேலும் மேலும் அதிகரித்தது. மயிற்பீலியால் தடவிப் பார்த்தும் மந்திரங்கள் உரு வேற்றியும் பலனில்லை. ஒரே உடலில் வலப்பக்கம் குளிர்ச்சியாகவும் இடப்பக்கம் வெப்பம் அதிகமாகவும் இருப்பதைக் கண்ட மன்னன் ஆச்சரியமடைந்தான்.
“என்னை விட்டுச் செல்லுங்கள்” என்று சமணர்களைச் சீறினான் மன்னன். சம்பந்தரிடம், “என்னை உய்யக் கொண்ட மறைக்குல வள்ளலாரே! இந்த வெப்ப நோயை முழுமையாகப் போக்க அருள் செய்ய வேண்டும் என்று அடிபணிந்தான். இதைக் கண்ட அரசியும் அமைச்சரும் மனமகிழ்ந்தார்கள். சம்பந்தர் அருளால் மன்னனுடைய வெப்பு நோய் முற்றும் நீங்க, மன்னன், “ஞானசம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன்” என்று மகிழ்ச்சிக் கடலில் திளைத்தான்.
ஆனால் சமணர்கள் அவ்வளவு எளிதில் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. மறுபடியும் சம்பந்தரை அனல்வாதம், புனல்வாதம் செய்ய வரும்படி வற்புறுத்தினார்கள். சம்பந்தர் சற்றும் தயங்காமல் அனல்வாதம், புனல்வாதம் செய்ய ஒப்புக் கொண்டார்.
அதன்படி சமணர்களும், சம்பந்தரும் தங்கள் தங்கள் ஏடுகளைத் தீயிலிட்டனர். சம்பந்தருடைய ஏடுகள் பசுமையாயிருக்க, சமணர்களுடைய ஏடுகள் தீயிலிட்ட பஞ்சு போல் பொசுங்கின.
இதன்பின் இருவரும் தத்தம் ஏடுகளை ஓடும் வைகை ஆற்றில் போட்டார்கள். சம்பந்தருடைய ஏடுகள் தண்ணீரை எதிர்த்துச் சென்று திருவேடகம் என்று வழங்கப்பெறும் இடத்தில் கரையேறின. சமணர்களின் ஏடுகள் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டன. இந்தக் காட்சிகளைக் கண்ட மன்னனும் மக்களும் அதிசயித்தனர். சம்பந்தரை வாழ்த்தி முழக்கமிட்டனர். மன்னனும் தன் தறை உணர்ந்தான்.
“ஆலவாய் அண்ணலே! அமணர்கள் மாய்கையால் மயங்கி நானும் உன்னை மறந்தேன். தக்க சமயத்தில் ஆளுடைப் பிள்ளையை அனுப்பி என்னை ஆட்கொண்டாயே!” என்று பணிந்தான். திருநீற்றின் மகிமையை உணர்ந்து சிவ பக்தனானான்; நாட்டில் சைவம் தழைக்க ஆரம்பித்தது.
பாண்டிய நாட்டிற்கே கேடு வந்த சமயம் மங்கையர்க்கரசியார் மிகவும் சாதுரியமாக முடிவெடுத்து அமைச்சர் குலச்சிறையாருடன் சென்று சம்பந்தர் மூலமாக அக்கேட்டை நீக்கினாள்; மன்னனையும் மீட்டெடுத்தாள். நாட்டையும் வீட்டையும் தக்க சமயத்தில் கைகொடுத்துக் காப்பாற்றினாள். மங்கையர்க்கரசி மங்கையர்க்கு எல்லாம் அரசியாகி 63 நாயன்மார்களில் ஒரு நாயன்மாராகவும் சிறப்பித்துப் பேசப்படுகிறார்.

வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்!

1. ஆறுமுகம்:ஈசானம், தத்புருஷம்,
வாமதேவம், அகோரம், சத்யோஜாதம்
என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.
2. குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்.
3. குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன்.
4. முருகன்: முருகு அழகு என்று பொருள்,
எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.
5. குருபரன் : கு - அஞ்ஞான இருள்,
ரு - நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும்,
அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.
6. காங்கேயன்:கங்கையின் மைந்தன்.
7. கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.
8. கந்தன் : கந்து - யானை கட்டும் தறி. கந்தன்ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன்ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.
9. கடம்பன் : கடம்ப மலர் மாலை அணிந்தவன்.
10. சரவணபவன் : சரம் - நாணல்,
வனம் - காடு, பவன் - தோன்றியவன்,
நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.
11. ஸ்வாமி: ஸ்வம் - சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்குமட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.
12. சுரேஷன் :தேவர் தலைவன் சுரேசன்.
13. செவ்வேள் :செந்நிறமுடையவன்,
ஞானச் செம்மை உடையவன்.
14. சேந்தன் :செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.
15. சேயோன் : சேய் - குழந்தை, குழந்தை வடிவானவன்.
16. விசாகன் : விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.
17. வேலவன், வேலன் : வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.
18. முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.
19. சோமாஸ்கந்தன் : ச - உமா - ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்;சத்து - சிவம்,
சித்து - உமை, ஆனந்தம் - கந்தன், முருகன் ஆனந்த வடிவானவன்.
20. சுப்ரமணியன் :சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து,நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.
21. வள்ளற்பெருமான் : முருகன்,
மண்ணுலகில் அவதரித்தவள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியாசக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மைநலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.
22. ஆறுபடை வீடுடையோன்:
மூலாதாரம், சுவாதிஷ்டானம்,மணிபூரகம்,
அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.
23. மயில்வாகனன் : மயில் - ஆணவம்,
யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.
24. தமிழ் என்றால் முருகன்: முருகன் என்றால் தமிழ். இரண்டையும் பிரிக்கமுடியாத அளவிற்கு இணைந்தே இருக்கும். உதாரணமாக 12 உயிரெழுத்து என்பதுமுருகனின் 12 தோள்களை குறிக்கும். 18 மெய்யெழுத்து என்பது முருகனின் 18 கண்கள் (முருகன் சிவனது நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் என்பதால், இவரது ஒவ்வொரு முகத்திலும் இவருக்கும் நெற்றிக்கண் உண்டு) 6 இன எழுத்துஎன்பது 6 முகங்களை குறிக்கும். ஃ என்ற ஆயுத எழுத்து வேலை குறிக்கும்.
இந்தவேலை வணங்குவதையே வேலையாக கொண்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

பித்ரு வழிபாடு கேள்வி - பதில்

1. ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் செய்ய வேண்டிய வழிபாடு எது?
பித்ரு வழிபாடு
2. பித்ரு வழிபாடு என்றால் என்ன?
இறந்த நம் முன்னோர்களை வழிபாடு செய்வதே பித்ரு வழிபாடு ஆகும்.
3. பித்ரு வழிபாடு செய்வதன் முக்கியத்துவம் என்ன?
எல்லா வழிபாடுகளுக்கும் முதன்மையானது பித்ரு வழிபாடு ஆகும். பித்ரு வழிபாடு முடிந்த பின்னரே மற்ற வழிபாடுகள் நடைபெற வேண்டும்.
4. பித்ரு வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும்?
நம் நலனில் அக்கறை கொண்ட பித்ருக்கள் பசியில்லாமல் ஒளியுலகில் இன்புற்றிருக்க பித்ரு வழிபாடு கட்டாயம் செய்ய வேண்டும்.
5. பித்ரு வழிபாட்டை யாரெல்லாம் செய்யலாம்?
இனம், மதம், மொழி, சாதி வேறுபாடு இல்லாமல் யார் வேண்டுமானாலும் பித்ரு வழிபாடு செய்யலாம்.
6. பித்ரு வழிபாட்டை தந்தை உயிரோடு இருக்கும் போது செய்யலாமா?
தாராளமாக செய்யலாம். இறந்த முன்னோர்கள் தன் பசியாற நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். உதாரணமாக நம் தாத்தா அவரது மகன் உணவளித்தால் தான் சாப்பிடுவாரா? இல்லையே. அவரது பேரப்பிள்ளைகள் நாம் உணவளித்தாலும் சாப்பிடுவார்.
7. பித்ரு வழிபாட்டை பெண்கள் செய்யலாமா?
தாராளமாக செய்யலாம். அமாவாசை முடிவதற்குள் ராமன் பித்ரு வழிபாடு செய்ய இயலவில்லை. அதற்குள் சீதாதேவி பித்ரு வழிபாட்டை செய்து முடித்தார். ராமன் மீண்டும் பித்ரு வழிபாடு செய்ய தொடங்க தசரதர் அசரீரீயாக தாம் சீதாதேவி கொடுத்த எள் நீரால் பசியாறி விட்டதாக கூறினாராம். இதனை ராமாயணம் உறுதி கூறுகிறது.
8. பித்ரு வழிபாட்டை எங்கே செய்வது சிறப்பு?
கோவில்கள், நதிக்கரைகள், குளக்கரைகள், கடற்கரைகள், புண்ணிய தீர்த்தங்கள், ஜீவ சமாதிகள் ஆகிய இடங்களில் செய்யலாம்.
9. பித்ரு வழிபாட்டை செய்ய சிறப்பான இடம் எது?
இவ்வுலகில் பித்ரு வழிபாடு செய்ய எத்தனையோ இடங்கள் இருப்பினும் திருவண்ணாமலையில் செய்யும் பித்ரு வழிபாடு 1000 மடங்கு பலன் தரக்கூடியது. பித்ரு வழிபாடு செய்ய திருவண்ணாமலையை விட சிறந்த இடம் உலகில் இல்லை. அண்ணாமலையாரே வல்லாள மகாராசருக்கு பித்ரு கடன் தீர்த்த இடமான பள்ளிகொண்டாப்பட்டு (திருவண்ணாமலையிலிருந்து 5 கிமீ தொலைவில்) என்னும் ஊர் மிகவும் சிறப்பானது. அண்ணாமலையாரே பித்ரு கடன் தீர்த்த இடத்தை விட சிறப்பான இடம் உலகில் இருக்க முடியாது. இது அகத்தியர் வாக்கு.
10. பித்ரு வழிபாட்டை எப்போது செய்யலாம்?
மாதப்பிறப்பு, அயன பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண காலங்கள், அமாவாசை திதி ஆகிய காலங்களில் பித்ரு வழிபாட்டை செய்யலாம். கோவில் தலங்களில் செய்யும் பொது எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். கோவில் தலங்களுக்கு காலவரையறை இல்லை.
11. பித்ரு வழிபாட்டில் இடம் பெற வேண்டிய பொருட்கள் யாவை?
தர்ப்பை, சுத்தமான நீர், கருப்பு எள் (ஆண்களுக்கு), வெள்ளை எள் (பெண்களுக்கு), ருத்திராட்சம், சங்கு ஆகியன.
12. பித்ரு வழிபாட்டில் எந்த மந்திரங்களை பயன்படுத்த வேண்டும்?
வடமொழி அல்லது தமிழ் மந்திரங்களை பயன்படுத்தலாம். தமிழ் மந்திரங்கள் மிகவும் சிறப்பானவை. ஏனெனில் தமிழே மந்திரமொழி ஆகும்.
13. பித்ரு வழிபாடு முடிந்தவுடன் செய்ய வேண்டிய முக்கிய செயல் என்ன?
அன்னதானம் செய்ய வேண்டும்.
14. பித்ரு வழிபாட்டின் பயன்கள் யாவை?
திருமணம், வேலை கிடைத்தல், குழந்தை பாக்கியம், செல்வ செழிப்பு, குடும்ப முன்னேற்றம் இன்னும் பல.
15. பித்ரு வழிபாடு செய்யாவிடில் ஏற்படும் துன்பங்கள் யாவை?
பித்ரு தோஷம் மற்றும் பித்ரு சாபம் உண்டாகும்.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!
ஓம் றீங் அண்ணாமலையே போற்றி…!!!

Friday, August 28, 2015

தூத்துக்குடி வரலாறு

தூத்துக்குடி எனும் பெயர் இந்நகருக்கு வந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் சில உள்ளன.கி.மு.123ல் தாலமி என்ற கிரேக்க பயணி தனது பயண நூலில் "சோஷிக் குரி'(சிறு குடி)சோதிக்குரைஎன்ற முத்துக்குளித்துரை நகரம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் சோதிக்குரை நகரம்தான் தூத்துக்குடி என்று வரலாற்று அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்.
அகஸ்டஸ் சீசரின் பியூட்டிஸ்கர் அட்டவணை ரோமானியரின் வர்த்தகம் நடைபெற்ற இடம் என்று தூத்துக்குடியைக் குறிப்பிடுகின்றது. "சோல்சியம் இண்டோரம்' என்ற பெயரில் குறிப்பிடப்படுவது தூத்துக்குடியாகும்.
கிபி.80ல் ஒரு அறிமுகமற்ற அடுக்கியந்திரியின், கிரேக்கர்கள் எரித்திரிரேயன் கடல் பெரிப்லஸ், என்ற நூலில் தூத்துக்குடி என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்க்கோ போலோ எனும் இத்தாலியப் பயணி முத்துக்குளித்தல் மற்றும் இப்பகுதி மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
ஜேம்ஸ் கர்னல் மன்னார் வளைகுடாவில் முத்துக்குளித்துரையை பற்றி சென்னை அரசாங்கத்திற்குதான் சமர்ப்பித்த அறிக்கையில் தோத்துக்குரையாகமாறி இறுதியில் தூத்துக்குடி என்ற பெயர் பிறந்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.
தூத்துக்குடி என்ற பெயர் ஐரோப்பியர்களின்உச்சரிப்பில் மாற்றம் பெற்று டூட்டிகொரின் ("Tuticorin") என்று வந்துள்ளதென்று கால்டுவெல் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி கடந்த காலத்தில் 'திரு மந்திர் நகர்' என்று அறியப்பட்டது. அனுமான் சீதையை தேடி இலங்கை செல்லும் வழியில் தூத்துக்குடி நகரில் முகாமிட்டிருந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த நகரத்தின் பெயரும் கூட “தூதன்” என்ற வார்த்தையில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்நகரத்தின் பெயர் பின் வரும் இரண்டு வார்த்தைகளில் இருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.அதாவது “தூர்த்து” இதன் பொருள் ‘கடலில் இருந்து உருமாறி வந்த நிலம்’.“குடி” இதன் பொருள் ‘ குடியமர்தல்’. வரலாற்றின் ஆரம்ப நாட்களில் இருந்து துறைமுக நகராக இருப்பதினால் இது பிரபலமாக உள்ளது. பாண்டிய மன்னன் ஆட்சி காலத்தில் கூட இது ஒரு பிரபலமான துறைமுகமாக இருந்து வந்துள்ளது.
1548 ம் ஆண்டு ,இந்நகரத்தை பாண்டிய மன்னனிடம் இருந்து போர்த்துகீசியர்எடுத்து கொண்டனர். பின்னர் 1658 இல் இந்நகரம் டச்சுகாரர்கள் வசம் சென்றது. பின்னர் 1825 இல் இது ஆங்கிலேயர் கீழ் வந்தது.1866 ல் இது ஒரு நகராட்சியாக நிறுவப்பட்டது மற்றும் ரோச் விக்டோரியா இந்நகரத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2008 ல் இது ஒரு மாநகராட்சியாக மாற்றப்பட்டது.

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்.....

 நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து......!
* பித்தத்தைப் போக்கும்......!
* உடலுக்குத் தென்பூட்டும்......!
* இதயத்திற்கு நல்லது......!
* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்......!
* கல்லீரலுக்கும் ஏற்றது......!
* கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்......!
* சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்.....!
* கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்.....!
* முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்......!
*இரத்தச்சோகைக்குநிவாரணமளிக்கும்......!
* மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது......!
* பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள்வெளியேறும்.....!
* பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்,‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது......!
* பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது......!
* இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்......!
* உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது......!
* இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்......!
* ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களைமீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்......!
* நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது......!
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்......!
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்......!
அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை....
படித்துவிட்டு அதிகம் பகிருங்கள்...!

நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலை

சதுரகிரியும், திருவண்ணாமலையும், எத்தனை முறை சென்றாலும் , ஒவ்வொரு முறையும் அதன் பிரம்மாண்டத்தை உணர்த்துவதில் தவறியதே இல்லை.
இன்று மகாலிங்க மலையைப் பற்றி - நீங்கள் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.
திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்க
தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்
* மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை "சஞ்சீவி மலை' என்கின்றனர்.
*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.
*ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.
* பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.
*இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.
*மகாலிங்கம் கோயிலின் வடக்கே "ஊஞ்சல் கருப்பண சாமி' கோயில் உள்ளது.
* சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.
* ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.
* சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.
இருப்பிடம்:
மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.
அல்லது , மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் - செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி - கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி - அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது.
அங்கிருந்து தாணிப் பாறைக்கு - மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.
திறக்கும் நேரம்:
காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.போன்: 98436 37301, 96268 32131
மலைக்கு மேலே - சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க " கஞ்சி மடம் ' உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ - நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.
சதுரகிரி தல வரலாறு : சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.
வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.
சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.
சிவபெருமான் அவனை தேற்றி, "" நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும்.
மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.
இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.
இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.
கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.
இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.
இரட்டை லிங்கம்: ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.
""சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,''என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.
பிலாவடி கருப்பு: வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், ""சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,'' என்றார்.
வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை "பிலாவடி கருப்பர்' என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.
பெரிய மகாலிங்கம்: நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை "பெரிய மகாலிங்கம்' என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
தவசிப்பாறை: மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது.
[p91a.jpg]
தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை "நவக் கிரக கல்' என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள "ஏசி' பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் "வெள்ளைப்பிள்ளையார்' பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.
சுந்தரமூர்த்தி
கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்ப மலை' என்கின் றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது. அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.
பார்வதி பூஜித்த லிங்கம் : சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும்
இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர்.
இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.
லிங்க வடிவ அம்பிகை
சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.
சதுரகிரியில் தீர்த்தங்கள்
சந்திர தீர்த்தம்
சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் 'சந்திர தீர்த்தம்' இருக்கிறது.இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.
கெளண்டின்னிய தீர்த்தம்.
சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.
கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ''பாவகரி நதி'' என்னும் பெயரும் உண்டு.
சந்தன மகாலிங்கம் தீர்த்தம்.
இச்சதுரகிரியின் மேல் 'காளிவனம்' என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும்.
இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.
இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய 'திருமஞ்சனப் பொய்கை' உண்டு.
காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட 'பிரம்மதீர்த்தம்' ஒன்று சதுரகிரி மலைக்
காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது. இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட 'பொய்கைத் தீர்த்தம்'', ''பசுக்கிடைத் தீர்த்தம்'', 'குளிராட்டித் தீர்த்தம்' போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.
பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன.
அபூர்வ மூலிகைகள் :
இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.
பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.
தவிர கோரக்க முனிவரால் 'உதகம்' என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது.
இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் 'உதகம்' என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது.
விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக
பயன்படுத்த வேண்டும்.
சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது.
இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.
அதேபோல் 'ஏர் அழிஞ்ச மரம்' என்றொரு மரம் உண்டு.
இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில்
வந்து ஒட்டிக்கொள்ளும்.
இந்த 'ஏர் அழிஞ்ச மரத்தின்' கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.
சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.
இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.
இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் - " மதி மயக்கி வனம்" என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர். நான் கேள்விப்பட்ட வரை , எங்கள் அருகில் இருக்கும் கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். "மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து" என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. எதுவும் கோவில் கூட இல்லை. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார்.
இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் - சித்தர்கள், ரிஷிகள் - மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன. வீடியோ காமிராக்களில் அதை நிறைய பகதர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். ஏற்கனவே நாம் " கட்டை விரல் அளவில் காட்சி தந்த சித்தர் பற்றிய பதிவை வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம். இவை அத்தனையும் சர்வ நிஜம். இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் - மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமையை அந்த சிவம் உங்களுக்கு அளிக்கும்.
உங்கள் தேடல் , பக்தி உண்மை எனில் - நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும். இதை நிறைய பக்தர்கள் அனுபவித்து இருப்பதால் , இப்போதெல்லாம் சதுரகிரியில் கூடும் கூட்டத்திற்கு குறைவில்லை..
சதுரகிரி மலை - ஒரு ஆன்மிக உலா
சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.
சித்தர்களின் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களின் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படுகிறது.
சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.
இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களின் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி இங்கு வருகின்றனர்

ஓணம் பண்டிகை வரலாறு-2

பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. ஜாதி, மத பேதமின்றி கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழாவான ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அத்தம் நட்சத்திர நாளில் துவங்கி 10 நாட்கள் வரை இந்த விழா என்பதை ‘அத்தம் பத்தினு பொன்னோணம்’ என்று அழைப்பதுண்டு. தமிழ் மாதங்களில் ஆவணி மாதத்தில் அத்தம் நட்சத்திர தினத்தில் துவங்கும் ஓணம் சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் என்று 10 வது நாள் திருவோணமாக கொண்டாடப்படுகிறது. அவிட்டம், சதயம் என்று அதற்கு அடுத்த 2 நாட்கள் வரை ஓணம் விழா தொடர்வதுண்டு. ஓணத்தை அறுவடை திருநாளாகவும் மக்கள் கொண்டாடுகின்றனர்.
ஒரு ஓணம் & பல கதைகள்
ஓணத்திற்கான வரலாறு என்று பரசுராமர், புத்தர், சேரமான் பெருமாள், சமுத்ர பத்மராஜா, தானிய தேவன் என்று பலரது கதைகள், வரலாறுகள் இருந்தாலும் மகாபலி கதையே முக்கியத்துவம் பெறுகிறது. மகாபலி என்பதற்கு ‘பெரிய தியாகத்தை செய்தவன்’ என்பது பொருளாகும்.
பண்டை காலத்தில் இன்றைய கேரளாவை நல்லமுறையில் ஆண்டு வந்த மகாபலி மன்னன் ஆட்சியில் மக்கள் எல்லோரும் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அப்போது மகாபலி மீது தேவர்கள் குறை கூறினர். மகா விஷ்ணுவின் உதவியை நாடி ‘விஸ்வஜித்’ என்ற பெயரில் யாகம் நடத்தினார் மகாபலி. தேவர்கள் குறையை போக்கவும், உலகம் நிலைத்திருக்கும் வரை மகாபலி புகழுடன் விளங்க செய்ய மகா விஷ்ணு மிகச் சிறிய வாமன அவதாரம் எடுத்து பூலோகம் வந்தார். யாகம் நடத்திக் கொண்டிருந்த மகாபலியிடம் மூன்று அடி நிலம் தானம் கேட்டார்.
மூன்றடி மண்
மகாபலியும் நிலம் வழங்க தயாராக, குள்ள உருவமாக இருந்த மகாவிஷ்ணு விண்ணுக்கும் மண்ணுக்குமாக வளர்ந்து நின்றார். ஒரு பாதத்தை பூமியிலும், இன்னொரு பாதத்தை ஆகாயத்திலும் வைத்தார். மூன்றாவது அடிக்கு நிலம் கேட்க, மகாபலியோ தனது தலையை காண்பித்தார். அவரை அப்படியே அழுத்தி பூமிக்குள் புதைத்தார் மகா விஷ்ணு. அப்போது மகாபலியின் வேண்டுகோளையேற்று ஆண்டுக்கு ஒருநாள் அதாவது ஆவணி மாதம் திருவோண நாளில் மகாபலி தனது நாட்டு மக்களை காணவும் மகாவிஷ்ணுவும் வரம் கொடுத்தார். மன்னர் வருகிறார்
கேரள நாட்டு மக்களை மன்னர் காண வரும் நாள் என்ற நம்பிக்கையுடன் ஆண்டுதோறும் திருவோண பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் இந்த பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுகின்றனர். வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் வாழும் மலையாள மக்கள் ஓணத்தையொட்டி சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
எங்கும் விழாக்கோலம்
ஓணம் பண்டிகையால் கிராமம், நகரம் என்று அனைத்து பகுதிகளும் களைகட்டி காணப்படுகிறது. படகு போட்டிகள், மாறுவேட போட்டிகள், கலாசார ஊர்வலங்கள், கலை நிகழ்ச்சிகள் என்று கேரளா மாநில பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. அனைத்து வீடுகளிலும் அத்தப்பூக் களங்கள் அலங்கரிக்கின்றன.
தமிழகத்தில் விழா
கேரளாவையொட்டியுள்ள கன்னியாகுமரி, கோவை மற்றும் மலையாளிகள் அதிகம் வசிக்கின்ற சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தமிழக அரசு உள்ளூர் விடுமுறை வழங்கி உள்ளது. இம்மாவட்டங்களிலும் ஓணளண பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டு போட்டிகள், கலாச்சார விழாக்கள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
திருவோணம் !!! அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்....கேரள மக்கள் உற்சாகமாகக் கொண்டாடும் பண்டிகையான ஓணம், அவர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றாகும்.
இது அறுவடைநாள் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
மலையாள மாதமான "சிங்கம்"( ஆகஸ்ட் - செப்டம்பர் ) மாதத்தில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அத்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் விழா சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம், திருவோணம் என்று பத்து நட்சத்திரத்தில், பத்து நாட்கள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கடைசி நாளான திருவோணம் அன்று விழா இன்னும் சிறப்பாகக் கொண்டாப்படுகிறது.
இதன் சிறப்பாக கேரள மக்கள், தங்கள் இல்லங்கள் முன்பாக அத்தப்பூ கோலமிடுவர். இந்த 10 நாட்களிலும் கேரள பாரம்பரியத்தோடு நடனம், விளையாட்டு ஆகியவை இடம்பெறும். பண்டிகையின் போது ஓணம் சிறப்பு உணவு ( Onam Sadhya) பரிமாறப்படுகிறது.
முந்தைய காலத்தில் கேரளாவை மகாபலி சக்கரவர்த்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது ஆட்சியில் மக்கள் குறையின்றி, மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். வாமனன் என்னும் குள்ள அவதாரத்தில் வந்து, 3 அடி நிலம் கேட்ட விஷ்ணு பகவானுக்கு, மூன்றாவது அடியாக தன் தலையையே கொடுத்தவன் தான் இந்த மகாபலி.
பின்னர், முக்தி பெற்ற பிறகும் ஆண்டுக்கு ஒரு முறை தனது நாட்டு மக்களை காணும் பாக்கியத்தை அருள வேண்டும் என்று கேட்டார். பகவானும் அவ்வாறே அருளினார். இதன்படி ஆண்டுதோறும் நாட்டு மக்களை காண வரும் மகாபலியை வரவேற்கும் பொருட்டு இப்பண்டிகையை கேரள மக்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
மொத்தத்தில், ஓணம் பண்டிகை கேரளாவின் ஓர் அழகுத் திருவிழா !
‪#‎ஓண‬ சத்ய
ஓணப்பண்டிகையின் முக்கிய அம்சமே ஓண சத்ய என்று அழைக்கப்படும் தடபுடல் விருந்தாகும். உண்டறியணும் ஓணம் என்று கேரளாவில் கூறுவர். தலைவாழை இலைபோட்டு 15க்கும் மேற்பட்ட கூட்டுக்கறிகளுடன் விருந்து படைக்கப்படும். ஓண விருந்து பரிமாறுவதிலும், சாப்பிடுவதிலும் வழிமுறைகள் வகுத்துள்ளனர். தலைவாழை இலையில்தான் ஓண விருந்து பரிமாறப்படும். காரம், புளி, உப்பு, இனிப்பு, கசப்பு, துவர்ப்பு அடங்கிய அறுசுவைகளும் ஓண விருந்தில் இடம்பெறும். அவியல், சாம்பார், பருப்பு, எரிசேரி ஆகியவையும், 4 வகையான உப்பு இடப்பட்ட கறிகளும் உண்டு. தரையில் பாய் விரித்து அமர்ந்துதான் உண்ண வேண்டும். இலையில் இடது ஓரத்தில் முதலில் அப்பளம், அதற்கு மேல் பழம், அப்பளத்தின் வலது புறம் சிறிது உப்பு வைக்க வேண்டும்.
‪#‎இலையின்‬ இடது புறத்தின் மேல்பகுதியில் நேந்திரங்காய் உப்பேரியும், அதற்கு கீழே சர்க்கரை வரட்டியும், இடது புறத்தின் மேல் உப்பில் இட்ட கறிகளான எலுமிச்சை, மாங்காய், இஞ்சிக்கறி பின்னர் ஓலன் எரிசேரி, அவியல் கிச்சடி, பச்சடி, துவரன் ஆகியவை பரிமாறிய பின்னர் கடைசியில் சாதம் பரிமாறப்படும். இதற்கு பிறகுதான் பருப்பு, சாம்பார், காளன், பாயாசம் அடுத்தடுத்து பரிமாறப்படும். முதலில் சாதத்துடன் பருப்பும், நெய்யும் அப்பளமும் சேர்த்து சாப்பிட்ட பின்னர், சாம்பார் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் பாயாசமும், அடை பிரதமன், கடலை பிரதமன், பருப்பு பாயாசம், அரிசி பாயாசம், பாலடை என்று பல வகைகள் உண்டு. பாயாசத்திற்கு பின்னர் ரசத்துடன் சிறிது சாதம். இந்த ரசம் சேர்த்து சாப்பிடும் வழக்கம் தென் கேரள பகுதியில் மட்டுமே காணப்படும்.

ஓணம் திருவிழா வரலாறு

கேரள தேசத்தை ஆண்ட மகாபலி சக்கரவர்த்திஅசுர குலத்தில் பிறந்திருந்தாலும், அவனது நல்லாட்சி,தேவர்களுக்கு மேலானவனாகஅவனை சீர்தூக்கி விட்டிருந்தது.
★இந்த நிலையில் நாட்டின் நலன் கருதி வேள்வி ஒன்றைநடத்த முன்வந்தான் மகாபலி சக்கரவர்த்தி.
★அந்த வேள்வியின்நடுவில் தானம் கேட்டு வரும் அனைவருக்கும் கேட்டதை தரும்சிறப்பான தருமத்தை செய்யவும் அவன்முடிவு செய்திருந்தான்.
★இதை அறிந்த தேவர்கள் கலங்கிப் போனார்கள்.ஏற்கனவே பல நற்காரியங்கள் செய்ததன் காரணமாகதேவர்களைப் போன்ற உயர்ந்த நிலைக்குமகாபலி சக்கரவர்த்தி வந்து விட்டான்.
★தற்போதுஅவன் நடத்தப் போகும் வேள்வியும், அதில் கொடுக்கப்போகும் தான தர்மங்களும் மூவுலகையும் ஆட்சி செய்யும்தகுதியை அவனுக்கு பெற்றுத் தந்துவிடும்.
★மூன்று உலகங்களிலும் அவனை வெல்ல எவராலும் முடியாதுஎன்ற நிலை உருவாகி விடும்.
★இதனால் தங்களின் பதவிக்குஆபத்து ஏற்பட்டு விடுமே என்று அஞ்சினர் தேவர்கள்.
★இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் தங்களைகாத்தருளும்படி மகாவிஷ்ணுவிடம் போய் நின்றனர்.
★தேவர்களை காப்பது தன் கடமை என்பதால் அவர்களுக்குஉதவ முன்வந்தார்,மகாவிஷ்ணுஅதே நேரத்தில் மகாபலியின் சிறப்பைஉலகம் அறியச்செய்யவும் அவர் சித்தம் கொண்டார்.
★வேள்வி நிறைவடையும் தறுவாயில வாமனர் (குள்ளமானஉருவம்) வடிவில் வந்து அரசனிடம்,
””என் உயரத்தை போன்றே இந்த உலகில் மூன்று அடி மண்கொடுத்தால் போதும்’
என்று தானம் கேட்டார்.
★அவனது குரு சுக்கிராச்சாரியாருக்கு தெரிந்துவிட்டது,வந்திருப்பது மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பது. அதனால்தானம் தர வேண்டாம் என தடுத்தார்.
★மகிழ்ச்சியில் திளைத்தான் மகாபலி.
‘குருவே! என்னிடம்தானம் பெற வந்திருப்பது திருமாலின் அவதாரம் என்றால்,இதைவிட பெரிய பேறு எனக்கு என்ன இருக்கப் போகிறது!’
★என்று கூறியவன், அத்துடன் நில்லாமல், கமண்டலத்தைஎடுத்து நீர் வார்த்து தானத்தைக் கொடுக்க முன்வந்தான்.
★இதற்காகவே காத்திருந்த வாமனர், குள்ள உருவில் இருந்துமுதல் அடியைக் கொண்டு மண்ணுலகையும், இரண்டாம்அடியாக விண்ணுலகையும் அளந்து முடித்தார்.
★பின்னர்மகாபலியிடம்,
‘சக்கரவர்த்தியே! நான் இரு உலகங்களையும்இரண்டு அடியில் அளந்து விட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது’
★என்று கேட்டார்.
‘இறைவா! மூன்றாவது அடியை என் தலை மீது வையுங்கள்’
★என்று நிலத்தில் மண்டியிட்டு அமர்ந்து சிரம் தாழ்த்தி இருந்தான்.
★மகாவிஷ்ணுவும் தனது மூன்றாவது அடியை மகாபலியின்தலைமீது வைத்து அவனை பாதாள உலகத்திற்கு தள்ளினார்.
★சிறப்பு பெற்ற மகாபலி தொடர்ந்து
‘மகாபலியே! உன் நல்லாட்சியால் உன் நாட்டைவளம் பெறச் செய்தாய். அதனால் நீ பெற்ற பலன்கள் அனைத்தும்உனக்கு உயர்வைத் தந்தது. இப்போது நீ எனக்கு வழங்கியதானத்தினால், இந்த உலகமே போற்றும் அளவுக்கு சிறப்புற்றுஇருப்பாய்’
என்று அருளினார்.
★பாதாளத்திற்கு சென்ற மகாபலி சக்கரவர்த்தி,
‘திருமாலே!நான் என் நாட்டின் மீதும், நாட்டு மக்களின் மீதும் மிகுந்தபற்று வைத்திருக்கிறேன். அதைத் தாங்களும் அறிவீர்கள்.எனவே வருடத்திற்கு ஒரு முறை மட்டும் நான் என் நாட்டிற்குவந்து என் மக்களின் சிறந்த வாழ்க்கையை பார்க்க அனுமதிக்கவேண்டுகிறேன்’
என்றான்.
‘அப்படியே ஆகட்டும்’ என்று ஒப்புதல் அளித்தார் மகாவிஷ்ணு.
★அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணநட்சத்திரத் திருநாள் அன்று மகாபலி சக்கரவர்த்தி தன்னுடையநாட்டையும், நாட்டு மக்களையும் பார்ப்பதற்காக வருகிறார்.
★அவரை வரவேற்கும் விதமாகவே கேரள மக்கள் 10 நாட்கள்திருவிழாவாக ஓணம் பண்டிகையை நடத்துகின்றனர்.

Thursday, August 27, 2015

சிறுநீரகக் கற்கள் வராமல் இருக்க..!



தினமும் குறைந்தது இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக நீர்ச் சத்து நிறைந்த காய்கறி, பழங்களைச் சாப்பிடவேண்டும். கால்சியம் ஆக்சலேட், கால்சியம் பாஸ்பேட் ஆகிய உப்புக்கள்தான் சிறுநீரகக் கற்கள் உருவாக முக்கியக் காரணங்கள். எனவே, இவை உருவாக அதிக வாய்ப்புள்ள மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியைக் கூடுமானவரை தவிர்க்கலாம்.
சிறுநீரகக் கல் வந்துவிட்டால், என்ன செய்ய வேண்டும்..?!
உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். பழச்சாறு, இளநீர், வாழைத்தண்டு சாறு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாழைத்தண்டு சாறில் நார்ச் சத்தும் அதிக அளவில் உடலுக்குத் தேவையான தாது உப்புக்களும் உள்ளன. இவை சிறுநீர் கழிப்பைத் தூண்டும். இதனால், சிறிய சிறிய கற்கள் எல்லாம் வெளியே தள்ளப்படும். எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் அமிலப் பழங்களின் ஜூஸ் குடிப்பதன் மூலம், அது சிறுநீரில் அமிலத் தன்மையைக் குறைத்து கல் உருவாவதைத் தடுக்கும். ஒருவருக்கு ஒரு முறை சிறுநீரகக் கற்களை அகற்றிவிட்டாலும் அடுத்த ஐந்து வருடங்களில் திரும்ப வருவதற்கு 50 சதவிகித வாய்ப்பு உண்டு. அதனால், அவர்கள் கூடுதல் எச்சரிக்கையோடு இருத்தல் நலம்!

மூட்டு வலிக்கு உருளைக்கிழங்கு சாறு

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது. மூட்டுத் தேய்மானம் மூட்டழற்சி, முடக்குவாதம் என இரண்டு வகைப்படும்.
மூட்டழற்சி:
இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.
முடக்குவாதம்:
இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள், மணிக்கட்டு, கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.
மூட்டழற்சியின் அறிகுறிகள்:
நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.
முடக்குவாதத்தின் அறிகுறிகள்:
இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.
காரணம்:
முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம். முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரணமாகும். பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.
கைவைத்தியம்:
1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
2. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
3. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.
5. ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.
6. இரண்டு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கப் ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.
7. ஒரு டேபிள்ஸ்பூன் பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

Wednesday, August 26, 2015

How many of you know DR.TESSY THOMAS ?




How many of you know DR.TESSY THOMAS ?
She is the Project Director for many Missile project in Indian Defence Research and Development Organisation.
She was the Master mind and was responsible for success of 3,000 km range Agni-III missile project, Mission Agni IV project, 5,000 km range Agni-V in 2009.The missiles were successfully tested on 19 April 2012.
"We are all proud of our country. Agni-C is one of our greatest achievements"
Agni-V missile is most powerful and Dangerous weapon that will make the world fear India.
Once fired, It cannot be stopped,It travels faster than a Bullet and can carry 1000 kg of nuclear weapon and It has 5000 km Range.
It can be configured to launch small satellite and
can be used later to shoot down the enemy satellites in orbits.
It can be launched only on direct order of the Prime minister.
Because of her India now features among the super powers
We salute her outstanding contribution for making India self-reliant in the field of missile technology.

Tuesday, August 25, 2015

Health benefits of Peanuts

Peanuts are rich in energy (567 calories per 100 g) and contain health benefiting nutrients, minerals, antioxidants and vitamins that are essential for optimum health.
They compose sufficient levels of mono-unsaturated fatty acids (MUFA), especially oleic acid. MUFA helps lower LDL or "bad cholesterol" and increaseS HDL or "good cholesterol” level in the blood. Research studies suggest that Mediterranean diet which is rich in monounsaturated fatty acids help to prevent coronary artery disease and stroke risk by favoring healthy blood lipid profile.
Peanut kernels are good source of dietary protein; compose fine quality amino acids that are essential for growth and development.
Research studies have shown that peanuts contain high concentrations of poly-phenolic antioxidants, primarilyp-coumaric acid. This compound has been thought to reduce the risk of stomach cancer by limiting formation of carcinogenic nitrosamines in the stomach.
Peanuts are an excellent source of resveratrol, another polyphenolic antioxidant. Resveratrol has been found to have protective function against cancers, heart disease, degenerative nerve disease, Alzheimer's disease, and viral/fungal infections.
Furthermore, studies suggest that resveratrol may reduce stroke risk through altering molecular mechanisms in the blood vessels (reducing susceptibility to vascular damage through decreased activity of angiotensin, a systemic hormone responsible for blood vessel constriction that would elevate blood pressure), and by increasing production of vasodilator hormone, nitric oxide.
Recent research studies suggest that roasting/boiling enhances antioxidant bio-availability in the peanuts. It has been found that boiled peanuts have two and four-fold increase in isoflavone antioxidants biochanin-A andgenistein content, respectively. (Journal of agricultural and food chemistry).
The kernels are an excellent source of vitamin E (a-tocopherol); containing about 8 g per100 g. vitamin E is a powerful lipid soluble antioxidant which helps maintain the integrity of cell membrane of mucus membranes and skin by protecting from harmful oxygen free radicals.
The nuts are packed with many important B-complex groups of vitamins such as riboflavin, niacin, thiamin, pantothenic acid, vitamin B-6, and folates. 100 g of peanuts provide about 85% of RDI of niacin, which contribute to brain health and blood flow to brain.
The nuts are rich source of minerals like copper, manganese, potassium, calcium, iron, magnesium, zinc, and selenium.
Just a handful of peanuts per day provides enough recommended levels of phenolic anti-oxidants, minerals, vitamins, and protein.
Boiled peanuts possess unique flavor and taste. Boiling, in fact, enriches their nutritional and antioxidants profile.
They are nutty, yet pleasantly sweet in taste. Roasting enhances taste, augments antioxidants levels like p-coumaric acid, and helps remove toxic aflatoxin.

வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!!

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.
நீரழிவு நோயை தடுக்கும்:
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது.மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது . நாம் உண்ணும்உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
பித்தப் பை கல்லைக் கரைக்கும்:
நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இதயம் காக்கும்:
நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்துநிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.
இளமையை பராமரிக்கும்
இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.
ஞாபக சக்தி அதிகரிக்கும்:
நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளைவளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
மன அழுத்தம் போக்கும்:
நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும்.உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது.செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது.மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது
.
கொழுப்பை குறைக்கும்
:
தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம்.ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும்நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை.மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16கிராம் உள்ளது.
இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:
உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனைவாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில்நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள்நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.
கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:
பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம்,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம்,இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
நிறைந்துள்ள சத்துக்கள்:
100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.
பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு