Monday, July 20, 2015

லால் கிதாப் பரிகாரங்கள் !!!

இந்த நூல் வடஇந்தியாவில் பலருக்கும் மிகப் பிரசித்தம்.இந்திய ஜோதிட மற்றும் கைரேகை சாஸ்திரத்தைப் பற்றிய பண்டைய நூலான இதில் சில எளிய மற்றும் சிறந்த பலன்களைத் தரும் பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன.
இவற்றிற்கு தீக்ஷை எதுவும் தேவை இல்லை .இந்திய மட்டுமின்றி பாகிஸ்தான்,பங்களாதேஷ் மற்றும் ஹிந்துக்கள் இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதி மக்களும் பின்பற்றிப் பலன் பெறுகின்றனர்.
மேஷ ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள் :-
1.எந்தப் பொருளையும் இலவசமாக வாங்காதீர்கள்.ஒரு சிறு தொகையாவது கொடுத்தே வாங்குங்கள் .
2.சிகப்பு நிற கர்ச்சிப் பயன்படுத்துவது அதிர்ஷ்டமாகும்.
3.பின்னமில்லாத டிசைன் இல்லாத வெள்ளிக் காப்பை ஆண்கள் வலது கையில் அணிந்து கொள்ள வாழ்வில் நன்மைகள் பெருகும்.பெண்கள் வெள்ளியில் செய்த வளையல் அல்லது கங்கணம் அணியலாம்.
4.ஸ்வீட் அல்லது மிட்டாய் செய்பவராக ஸ்வீட் ஸ்டால் அல்லது மிட்டாய் கடையில் வேலை செய்யக்கூடாது .இது அதிர்ஷ்டத்தைக் கெடுக்கும்.
5. வீட்டில் எலுமிச்சை செடி வளர்க்கக் கூடாது.
6.தாய்,குரு மற்றும் ஆன்மீகப் பெரியவர்கள்,ஞானிகளுக்குமுடிந்த உதவி , சேவை செய்தல் வேண்டும்.
7.உறங்கும் பொழுது தலைமாட்டில் ஒரு செம்பு நிறைய நீர் நிரப்பி வைத்துக் கொள்ளவும்.அந்த நீரைக் காலையில் எழுந்ததும் ஏதேனும் செடிக்கு ஊற்றி வரவும்.
ரிஷப ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.ஆடையில் நல்ல வாசனைத் திரவியம் ( சென்ட் ) தடவிக்கொள்வது அதிர்ஷ்டத்தைப் பேருக்கும்.
2.சிலருக்கு அதீத காமசிந்தனையினால் பிரச்சனைகள் ஏற்படலாம் அவர்கள் ஸ்ரீ தத்தாத்ரேயரை வணங்கி வரலாம்.
3.மனைவியைத் தவிர வேறு பெண்களுடன் தவறான தொடர்பு வைத்திருந்தால் பிற்காலத்தில் குடும்பத்திற்குள் மரியாதைக் குறைவு, மன உளைச்சல் ,பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம்.கவனம் தேவை.
4.மனைவியை வீட்டு முற்றத்தில் எரியும் நெருப்பில் நீல நிறப் பூக்களைப் போடச் சொல்லலாம்.இது தம்பதிகளுக்குத் தோஷ நிவாரணமாகவும் அன்யோன்யத்தைப் பெருக்குவதாகவும் அமையும்.
5.பொருளாதார வசதி இருந்தால் ஏதேனும் ஒரு ஏழைக்குப் பசுமாடு தானம் தரலாம்.
6.பட்டு,நைலான் ,பாலியஸ்டர் போன்ற மென்மையான ஆடைகள் அதிர்ஷ்டமானவை.
7.ஜனவரி ,பிப்ரவரி மாதங்களில் புதிதாகச் செருப்பு,ஷூ வாங்க வேண்டாம். இது துரதிர்ஷ்டம் உண்டாக்கும்.
8.நீடித்த நல்வாழ்விற்கு :-
உங்கள் பொருளாதார நிலைக்கேற்ப மனைவியைத் தினமும் ஏதாவது ஏழைகளுக்குப் பணம்,உணவு என்று முடிந்ததைத் தானமாக வழங்கலாம். யாரும் பிச்சை கேட்டால் இல்லை என்று சொல்லாமல் ஒரு ரூபாயாவது போடுங்கள்.இது நிறைந்த செழிப்பான வாழ்வைத் தரும்.
மிதுன ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.படிகாரத்தூள் கொண்டு அல்லது படிகாரத்தூள்சேர்த்த பற்பொடி பற்பசை கொண்டு பல்துலக்குவது அதிர்ஷ்டம் தரும்.
2.முடிந்த போது மீனுக்குப் பொரி அல்லது இரை போடுவது நன்மை பயக்கும்.
3.புனித யாத்திரை ஸ்தலங்களுக்கு பால், அரிசி தானமாக வழங்கலாம்.
4.உங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு வறுமையில் உள்ள நோயாளிகளுக்கு மருந்துப் பொருட்கள் வாங்கித் தரலாம்.
5.12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் திட்டக்கூடாது.அவர்களை புதன்கிழமை அன்று வணங்கி ஆசி பெறுவது நன்மை தரும்.
6.பச்சை நிற ஆடைகள் அணியக் கூடாது.துரதிர்ஷ்டம் உண்டாக்கும்.
7.வீட்டில் மணி பிளான்ட் வளர்க்கக் கூடாது.
8.பச்சை நிறப் பாட்டிலில் கங்கை நீர் நிரப்பி அந்த பாட்டிலை இறுக்கமாக மூடி விடவும்.ஒரு வயலில் கொஞ்சம் நெருப்பு மூட்டி அதில் அந்த பாட்டிலைப் போட்டு விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.
கடக ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.செம்பு நட்டு,போல்ட் போடப்பட்ட கட்டியில் உறங்குவது நல்லது.
2.வெள்ளி டம்ளரில் பால் அருந்துவது அதிர்ஷ்டம் கொண்டு வரும்.
3.நீங்கள் மருத்துவர்களாக அல்லது ஹீலராக இருந்தால் கஷ்டப்படும் மக்களுக்கு கொஞ்சமாவது குறைந்த செலவில் அல்லது இலவசமாக சேவை செய்வது நன்மை தரும்.
4.எப்பொழுதும் வெறும் காலுடன் கோயிலுக்கு செல்லவேண்டும்.
5.ஆன்மீக பண்டிகை மற்றும் நிகழ்ச்சிகளில் முடிந்த தொண்டாற்ற வேண்டும்.
6.பௌர்ணமி அன்று தாயிடம் இருந்து ஒரு வெள்ளி நாணயம் மற்றும் கொஞ்சம் பச்சரிசியை ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து வாங்கி அதை எப்போதும் பீரோ அல்லது பணப்பெட்டியில் வைத்திருந்தால் என்றும் வறுமை ஏற்படாது.
7.சிறு வெள்ளித் துண்டு (SILVER BRICK) வாங்கி அதை வீட்டின் முன் வாசலில் வைத்து எரித்து விடவும்.இதுவும் வறுமை கடன் ஏற்படாது தடுக்கும்.
சிம்ம ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.முக்கியமான நிகழ்ச்சிகள்,இண்டர்வியூக்கள்,பிசினஸ் மீட்டிங்குகளில் கலந்து கொள்ளும் முன் கொஞ்சமாவது உணவு அருந்தி விட்டுச் செல்வது அதிர்ஷ்டம் தரும்.
2.மனைவியின் சகோதரர்கள்,மருமகன்கள் ,தங்கை மற்றும் அக்காள் மகன்கள் இவர்களுடன் நல்லுறவவைப் பேணுங்கள்.
3.ஒரு செம்பு நாணயம் அல்லது டாலரைக் கழுத்தில் ஒரு நூலில் கோர்த்து அணிந்து கொள்வது செல்வ நிலையில் ,தொழில் மற்றும் வேளையில் உயர்வு தரும்.
4.கண்பார்வையற்ற 10 பேருக்கு ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இனிப்பு பண்டம் வாங்கிக் கொடுத்தால் வாழ்வில் வளம் சேரும்.
5. உங்கள் ப[பொருளாதார நிலைக்கேற்ப ஏதேனும் ஒரு சேவை நிலையம் ,அன்னதான மன்றத்திற்கு அரிசி,பால் வழங்கலாம்.
6.யாரேனும் அன்பளிப்பாக ஏதாவது தந்தால் பதிலுக்கு சிறு பொருள் அல்லது ஏதேனும் ஒரு பதில் மரியாதை செய்வது சமூகத்தில் உங்கள் அந்தஸ்தை அதிகரிக்கும்.
7.மது மாமிசம் உண்பதை அறவே தவிர்ப்பது நல்லது.
8. 7 வகைத் தானியங்களை வாங்கி ஒரு சிகப்புத் துணியில் முடிந்து தலைக்கடியில் வைத்துப் படுத்து மறுநாள் காலையில்,அதை எறும்புகளுக்கு உண்ணக் கொடுத்தால் பித்ரு தோஷம் தீரும்.சுப காரியத் தடைகள் நீங்கும்.இதை சனிக்கிழமை தோறும் செய்து வருவது நல்லது.
9.உண்மையே பேச முயற்சியுங்கள்.நன்கு யோசித்த பின் வாக்குறுதி கொடுங்கள் அப்படிக் கொடுத்த பின் அதை நிறைவேற்றுங்கள்.
கன்னி ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு மூக்குத்தி அணிவிப்பது குடும்பத்திற்கு வளம் சேர்க்கும்.
2.மழை பெய்யும் பொழுது மொட்டை மாடி அல்லது வீட்டின் மேற்கூரையில் மழை நீர் ஒரு பாத்திரத்தில் விழும் படி வைக்க வீட்டிற்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.
3.வீட்டில் வழிபாடு செய்யும் இடத்தை அடிக்கடி மாற்றக் கூடாது.
4.புத்தாடை அணியும் முன் அவற்றில் கொஞ்சம் கங்கா ஜலம் அல்லது தீர்த்தாகர்ஷண மந்திரம் ஜெபிக்கப்பட்ட தண்ணீரை அந்த ஆடையில் சிறிது தெளித்த பின் அணிந்து வர என்றும் ஆடை ,அணிகலன்களுக்குக் குறை இருக்காது.
5.சனிக்ரஹ சாந்தி செய்து கொள்ளவும்.
6.மது,புகையிலை,புகை போன்ற போதைப் பழக்கங்களை முற்றிலும் தவிர்ப்பது வாழ்வில் உயர்வு தரும்.
7.புதன்கிழமை அன்று ஒரு மண் மூடியில் அகல் விளக்கு வைத்து அதை ஓடும் நீர் அல்லது கடலில் விடவும்.
8.புதன்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.மேலும் அன்று யாரையும் சபிக்கவோ யாருக்கும் வாக்குறுதி (PROMISE) அளிக்கவோ கூடாது.
9.பச்சை நிற கர்ச்சீப் வைத்திருப்பது அதிர்ஷ்டம் தரும்.
துலாம் ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.இறை நம்பிக்கை கொண்டவராக இருங்கள்.
2.கோயில் அல்லது தானங்களுக்கு வெண்ணை,தயிர்,உருளைக்கிழங்கு தானமாக அளிக்கலாம்.
3.வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் கோமியம் ( பசுமூத்திரம் ) தெளித்து வர செல்வம் பெருகும்.
4.மாமியார் வீட்டில் இருந்து வெள்ளி நாணயம் அல்லது வெள்ளிப் பாத்திரம் வாங்கி வைத்திருப்பது வளமான வாழ்வு தரும்.
5.நீங்கள் ஆண் என்றால் மாமியார் வீட்டு சீதனம் வரும் பொழுது ஏதேனும் ஒரு பித்தளைப் பாத்திரம் சேர்த்துப் பெற்றுக்கொள்ள அதிர்ஷ்டம் தரும்.
6.வீட்டுப்பெண்கள் வீட்டின் வெளிப்புறம் நடக்கும் போது செருப்பு அணிந்து நடக்கச் சொல்ல வேண்டும்.
7.நீங்கள் ஆண் என்றால் பெண்களை மதிப்பாகவே பேசுங்கள்.அது உங்கள் வாழ்வில் நிம்மதி ஏற்படுத்தும்.
8.பெற்றோர் தேர்ந்தெடுத்தவரையே திருமணம் செய்து கொள்வது நல்லது.
9. வெள்ளித் தட்டில் கொஞ்சம் தேன் விட்டு வீட்டின் தலை வாசலில் எரிக்கவும்.
10.தானமாக எதையும் பெறாதீர்கள்.அது வறுமையை ஏற்படுத்தும்.
விருச்சிக ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.வீட்டில் மண்ணால் செய்யப்பட பாத்திரத்தில் தேன் அல்லது குங்குமம் வைத்திருப்பது அதிர்ஷ்டம் உண்டாக்கும்.
2.தினமும் காலையில் கொஞ்சம் தேன் சாப்பிடுவது நலம் தரும்.
3.அரச மரம் மற்றும் முட்செடிகளை வெட்டக் கூடாது.
4.செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.
5.சிகப்பு நிற கர்ச்சீப் ,டை அதிர்ஷ்டம் தரும்.
6.பால் காய்ச்சும் பொழுது பொங்கி வடியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
7.இனிப்பு ரொட்டி செய்து சாதுக்கள்,மகான்களுக்கு வழங்கலாம்.
8.யாரிடம் இருந்தும் எந்தப் பொருளும் இலவசமாகப் பெறாதீர்கள்.அப்படிப் பெற்றால் அதற்குப் பதில் ஒரு பொருளேனும் கொடுத்து விடவும்.
9.செவ்வாய்க்கிழமை அன்று தேன், குங்குமம் சிகப்பு ரோஜா இவற்றை ஓடும் நீர் அல்லது கடலில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.
10.செவ்வாய்க் கிழமைகளில் இஷ்ட தெய்வத்திற்குச் சிகப்பு பூந்தி படைத்து வழிபட்டு வருவது வாழ்வில் வளம் சேர்க்கும்.
11.சகோதர்களின் மனைவியுடன் சண்டை இல்லமால் பார்த்துக் கொள்ளுங்கள்.
12.மூத்த சகோதரரிடம் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள் .
13.செவ்வாய்க் கிழமைகளில் ஹனுமனுக்கு செந்தூரம் மற்றும் ஆடை சாற்றி வழிபட வறுமை,கடன்,நோய்கள் நீங்கிய நல்வாழ்வு கிட்டும்
தனுசு ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.தொடர்ந்து 43 நாட்களுக்கு செம்பு நாணயங்களை ஓடும் நீரில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.
2.தந்தையின் படுக்கை,ஆடைகள்,உடைமைகள் அதிர்ஷ்டம் தருபவை.
3.பிச்சை கேட்பவர்களிடம் இல்லை என்று சொல்லாமல் இயன்றதைத் தர்மம் செய்யவும்.
4.திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஆலயத்திற்கு நெய்,தயிர்,அல்லது கற்பூரம் வாங்கிக் கொடுத்து வருவது நல்வாழ்வு தரும்.
5.வீட்டின் முன்பகுதியில் மஞ்சள் நிற பூ பூக்கும் செடிகளை வளர்ப்பது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
6.வியாழக் கிழமைகளில் ஹரிவம்ச புராணம் படிப்பது நல்லது.
7.அரசமரப் பிரதட்சிணம்,வழிபாடு நன்மை தரும்.
8.யாரையும் ஏமாற்றவோ ,பொய் சாட்சி கூறவோ கூடாது.
9. வாழ்வில் ஒரு முறையாவது ஹரித்துவார் செண்டு கங்கையில் குளித்து தானும் தனது சந்ததிகளும் நல்வாழ்வு வாழ வேண்டிக்கொள்ள அப்படியே நடக்கும்.
மகர ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஏழைகள்,யாசகர்களுக்கு வாழைப்பழம், பருப்பு,ஸ்வீட் தானம் செய்ய விபத்துக்கள்,எதிர்பாராத ஆபத்துக்களில் இருந்து காக்கும்.
2.ஆண் / பெண் யாராக இருந்தாலும் கணவன் /மனைவி தவிர்த்த பிறருடன் தவறான தொடர்பு கொள்ளவோ ,அதற்காக முயற்சிக்கவோ கூடாது.இது பிற்கால வாழ்வில் கொடிய தரித்திரத்தை உண்டாக்கும்.
3.பாலும் சீனியும் கலந்து ஆல மர வேரில் விடவும்.அதில் இருந்து மண் எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ள செல்வவளம் நிறைந்த வாழ்வு கிட்டும்.
4. கேது கிரகத்திற்கு சாந்தி செய்து கொள்ளவும்.
5.48 வயதுக்கு பின் வீடு கட்டுவது நாளது.அதற்கு முன் வீடு கட்டுவது அதிர்ஷ்டமல்ல.
6.கருப்பு,நீலம் ,ரோஸ் நிற ஆடைகளைத் தவிர்க்கவும்.
7.ஏதேனும் ஒரு சனிக்கிழமை கொஞ்சம் பால்,மற்றும் ஒரு வெள்ளி நாணயத்தை கிணற்றில் போடவும்.இது துரதிர்ஷ்டத்தை நீக்கி வாழ்வில் வளம் சேர்க்கும்.
8.கிழக்கு நோக்கிய வாசல் உள்ள வீடு அதிர்ஷ்டமானது.
கும்ப ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.கையிலோ கழுத்திலோ தங்க நகை அணிவது அதிர்ஷ்டம் தரும்.
2.குங்குமப்பூ அரைத்துக் குழைத்து நெற்றியில் திலகம் இட்டு வர நிறைந்த செல்வத்துடன் வாழலாம்.
3.மாதம் ஒரு முறை குளிக்கும் நீரில் கொஞ்சம் பால் கலந்து குளித்து வந்தால் பீடைகள் நீங்கும்.
4.சதுரவடிவமான வெள்ளி டாலரை நூல் அல்லது செயினில் கோர்த்துக் கழுத்தில் அணிந்தால் வேலை அல்லது தொழில் உயர்ந்த நிலை கிட்டும்.
5.வெள்ளியை உருக்கி 4 சிறு உருண்டைகளாகச் செய்து அதை ஒரு பேப்பர் அல்லது கவரில் போட்டு சட்டைப்பையில் வைத்திருந்தாள் செல்வம் பெருகும்.
6.ஏழைகள் அலல்து கோவில்களுக்கு எண்ணெய் தானம் செய்யலாம்.
7.ஞாயிற்றுக்கிழமை அன்று பைரவருக்கு மது படைக்கலாம்.ஆனால் அதை அருந்தக்கூடாது.
8.வீட்டின் மேல்பகுதி அல்லது மொட்டைமாடியில் பெட்ரோல்,டீசல் போன்ற எரிபொருட்கள் வைக்கக் கூடாது.
9.விரதம் இருப்பதாக இருந்தால் சனிக்கிழமை இருக்கவும்.
10.மது மாமிசம் உண்பதைத் தவிர்க்கவும்.
மீன ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்!!!
1.சட்டையின் உள்பாக்கெட்டில் சிகப்பு நிற ஸ்வஸ்திக் படம் வைத்துக் கொள்ளவும்.
2.பிறர் முன்னையில் குளிக்கக் கூடாது.
3.மொட்டை போட்டால் முழுக்க மொட்டையடிக்காமல் கொஞ்சம் பிடரியில் குடுமி வைத்துக் கொள்ளவும்.
4.ஆலயங்களில் உணவு பிராசதம் அளிப்பதை விட ஆடைகள் தானமாக அளிப்பதே சிறப்பு.
5.வீட்டில் துளசி வளர்க்கக் கூடாது.
6.வீட்டின் வழிபாட்டு அறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும். ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் பணியிலும் கலந்து கொள்வது நல்லது.
7.அரசமரப் பிரதட்சிணம் மற்றும் வழிபாடு நன்மை பயக்கும்.
8. யாரிடம் இருந்தும் தானமாக எதையும் பெறக்கூடாது.
9.வீட்டின் முன்புறம் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.
10.தொழில் சார்ந்த முடிவுகளில் மனைவியைக் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது.
11.பணப்பெட்டி அல்லது பீரோவில் தங்கக் கட்டி அல்லது தங்க நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து வைக்க செல்வம் பெருகும்.
12.கோழிக்குஞ்சுகளுக்கு இரை போடுதல் நன்மை பயக்கும்.
13.குருமார்களுடன் தொடர்ந்த தொடர்பில் இருத்தல் நன்று

https://www.myadvertisingpays.com/default.asp?spon=73342

No comments:

Post a Comment