Sunday, September 20, 2015

ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியதுஅவசியம உள்ளது....

ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியதுஅவசியம உள்ளது........
அதனால் பாஸ்போர்ட் நமக்கு தேவை என்றால் முதலில் நாம் அணுகுவது இடை தரகர்களை தான், ஆனால் தற்போது எந்த இடை தரகர்களும் இல்லாமலே நாமே நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை இப்போது ஆன்லைனில் மாறிவிட்டது. புதியதாக நிறுவப்பட்டுள்ள “பாஸ்போர்ட் சேவக் கேந்திரா” Passport Seva Kendras (PSK) என்கிற செயல்பாட்டின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து…..
விண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களது பாஸ்போர்ட்டைப் பெற்று விடலாம். அந்த அதிகாரப்பூர்வ இணையதளம் இப்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TATA Consultancy Services) மூலம் பராமரிக்கப்படுகிறது. நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாததால் தரகர்களிடம் சென்று எடுக்கிறோம், இனி அந்த அவசியம் தேவையில்லை. உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பாஸ்போர்ட் எடுக்க என்ன விதிமுறை மற்றும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள போகிறோம்.
• ஆர்டினரி (Ordinary)
• அப்பிசியல் (Official)
• டிப்ளோமேட்டிக் (Diplomatic)
• ஜம்போ (Jumbo)
என நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், Official பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும், Diplomaticபாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், Jumboபாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஆர்டினரி(Ordinary), மற்றொன்று தட்கல் (Tatkal).
ஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டைப் பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம். மீண்டும் அதை அதற்கான கட்டணத்தைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ளலாம். ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10வருடங்களுக்கு வழங்கப்படும். இப்படி புதுப்பிக்கும்போது, 15 நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.
முக்கியமாக இரண்டு ஆவணங்கள் வேண்டும்.
• ரேசன் கார்டு
• பான் கார்டு
• வாக்காளர் அடையாள அட்டை
• வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
• தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
• எரிவாயு இணைப்பிற்கான ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
• விண்ணப்பதாரர் 26.01.89 அன்றைக்கு பிறந்த அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருந்தால் மட்டும் நகராட்சி ஆணையாளரால் அல்லது பிறப்பு & இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கும் பிறப்பு/இறப்பு சான்றிதல் ஏற்கதக்கதாகும்.என்றால் அரசாங்கத்தால் தரும் பிறப்பு சான்றிதழ்
• பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
• கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
• 10வது மேல் படித்திருந்தால் ECNR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
• உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
• பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,
• மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.
• பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
• எட்டாம் வகுப்புக்கு குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண் ணப் பிக்கலாம். 26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.
சிறுவர்-சிறுமியர்க்கு (14 வயதுக்கு உட்பட்டவர்)கடவுச்சீட்டு எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் கடவுச்சீட்டு இருப்பவராக இருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது. பெற்றோர்க்கு கடவுச்சீட்டு இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே கடவுச்சீட்டு அளிப்பர்.
• விண்ணப்பதாரர்கள் வட்டார பாஸ்போர்ட் அலுவலகத்திலுள்ள அதற்குரிய அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டியதற்கான திட்டமிட்ட தேதி, நேரம், தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணம் ஆகியவைகளை பெறமுடியும்
• நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய தேவையில்லை
பாஸ்போர்ட் கட்டணம் தெரிந்து கொள்ள :http://passport.gov.in/cpv/FeeStructure.htm
• புதிய மற்றும் புதுபிக்க : 1500 ரூ (சாதரணமான முறை)
• காணாமல் போனால் – சேதமடைந்தால் – 1500ரூ (பாஸ்போர்டு முடிந்து இருந்தால் – Expired)
• காணாமல் போனால் – சேதமடைந்தால் – 3000ரூ (பாஸ்போர்டு Expire ஆகவில்லை எனில்)
• 60 பக்கங்கள் வேண்டுமெனில் 500 ரூபாயைச் சேர்த்துக் கொள்ளவும்
• தட்கல் முறையில் பெற 2000 ரூபாயைச் சேர்துக் கொள்ளவும்
பாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் “Non Traceable” சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளி கேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய் மற்றும் தட்கலுக்கு5000 ரூபாய் கட்டணம்.
பொதுவாக, பாஸ்போர்ட் விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செலுத்தி 30 நாள்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விடுகின்றன. அவசரமாக வெளிநாடு செல்பவர்க்கு உதவியாக விரைந்து பாஸ்போர்ட் பெறவும் வகையிருக்கிறது. இதற்கு “தட்கல் திட்டம்” என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் சிறப்புரிமை அடிப்படையில் விரைந்து பாஸ்போர்ட் பெற முடியும்.
தட்கல் திட்டத்தின் கீழ் வழங்கும் அனைத்து பாஸ்போர்ட்களைச் சார்ந்த காவல்துறையின் சரிப்பார்க்கும் பணி பாஸ்போர்ட் வழங்கிய பின் இருக்கும் கீழே சொல்லப்பட்ட பட்டியலிலிருந்து மூன்று ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் தட்கால் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பதார்ர் பெறமுடியும். மூன்று ஆவணங்களில் ஒன்று புகைப்படைத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருக்க வேண்டும்
அவ்வாறு விரைந்து பாஸ்போர்ட் பெற விழைவோர் ரூ.2500/- கட்டணமாக செலுத்த வேண்டும். 3 ஆவணங்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.
கீழ் வரும் ஆவணங்களின் பட்டியலிலிருந்து, பாஸ்போர்ட்-க்காக மூன்றை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்
• வாக்காளர் அடையாள அட்டை
• இரயில்வே அடையாள அட்டைகள்
• வருமான வரி அடையாள (Pan Card) அட்டைகள்
• வங்கி அலுவலக புத்தகம்
• எரிவாயு இணைப்பிற்கான ரசீது
• ஓட்டுனர் உரிமம்
• பிறப்பு சான்றிதழ்கள் (Birth Certificate)
• தாழ்த்தப்பட்ட(எஸ்சி)/பழங்குடியினர் (எஸ்டி)/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) சான்றிதழ்கள்
• சொத்து ஆவணங்களான பட்டா, பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தபத்திரங்கள் இன்னும் பிற குடும்ப அட்டைகள்
• அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களால் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான புகைப்பட அடையாள அட்டைகள்
• ஓய்வூதிய ஆவணங்களான முன்னாள் இராணுவ வீரரின் ஓய்வூதிய புத்தகம்/ ஓய்வூதியம் செலுத்துவதற்கான ஆணை, முன்னாள் இராணுவ வீரரின் விதவை/சார்ந்தவர்கள் சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதிய ஆணை, விதவை ஓய்வூதிய ஆணை
• மத்திய/மாநில அரசுகளால் வழங்கப்பட்ட பணிக்கான புகைப்பட அடையாள அட்டை, பொது நிறுவனங்கள், உள்ளூர் அமைப்புகள் அல்லது பொது வரையறை நிறுவனங்கள்

Saturday, September 19, 2015

INDIA'S RICHEST "BEGGARS" !!!!!


நீதி மன்றத்தில் பயன்படுத்தப்படும் ஆங்கில வார்தைகள்

உச்சநீதிமன்றம் - Supreme Court
உயர்நீதிமன்றம் - High Court
நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Judicial Magistrate Court
மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் - District Munsif Court
தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Chief Judicial Magistrate Court
சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Special Judicial Magistrate Court
அமர்வு நீதிமன்றம் - Sessions Court
உரிமையியல் வழக்குகள் - Civil Cases
குற்றவியல் வழக்குகள் - Criminal Cases
எதிர்வாதி / எதிர்மனுதாரர் / பிரதிவாதி - Defendant
வாதி / மனுதாரர் /புகார்தாரர் - Plaintiff / Complainant /Petitioner
குற்றஞ்சாட்டப்பட்டவர் - Accused
பாதிக்கப்பட்ட தரப்பு - Adverse Party
கட்சிக்காரர் - Client
சங்கதி - Fact
மறு விசாரனை - Re Examination
ஆபத்தான கேள்வி - Risky Question
தடாலடி பதில் - Fatal Reply
குறுக்கு விசாரனை - Cross Examination
உண்மை உறுதிமொழி ஆவணம் - Affidavit
குற்றவாளி - Offender
குற்றச்சாட்டு - Charge
மெய்ப்பிப்பு - Proof
சொத்து - Property
குற்றம் - Offense
கட்டைவிரல் ரேகைப்பதிவு - Thumb Impression
திருட்டு வழக்கு - Theft Case
திருட்டுப் பொருள் - Stolen Property
பைத்தியம் - Insanity
சான்றொப்பம் - Attestation
சச்சரவு - Affray
தீர்ப்பு - Sentence
அவசரத்தன்மை மனு - Emergent Petition
கீழமை நீதிமன்றம் - Lower court
பரிகாரம் - Remedy
உறுத்துக் கட்டளை - Injection Order
நிரந்தர உறுத்துக் கட்டளை - Permanent Injection Order
வழக்கின் மதிப்பு - Suit Valuation
வழக்குரை - Plaint
வழக்குரையில் திருத்தம் - Amendment in Plaint
பண வழக்கு - Money Suit
அவதூறு வழக்கு - Defamation Suit
வறியவர் வழக்கு - Pauper Suit
எதிர்வுரை - Counter
எழுவினாக்கள் (சிக்கல்) - Issues
மேல்முறையீடு -Appeal
வரைமொழி வாதுரை - Written Argument
குற்றப்பத்திரிக்கை - Charge Sheet
தற்காலிக நிறுத்த மனு - Caveat petition
கோருரிமை மனு - Claim Petition
தடை நீக்கம் - Removal of obstruction
வழக்கில் சமரசம் செய்து கொள்ளல் - Compromise of suit
எதிர் மேல்முறையீடு - Cross Appeal
எதிர் மறுப்பு - Cross-objection
வறியவர்களால் தொடுக்கப்படும் வழக்குகள் - Suits by Indigent Persons
நீதிமன்றக் காப்பாளர் - Court Guardian
ஒத்தி வைத்தல் - Adjournment
சாட்சி - Witness

வேலை இணையதளம்

வேலை இணையதளம்
ஒரு முக்கிய தகவல் வேலை தேடும்
நண்பர்களுக்கு ஓர்
தகவல் !! //பகிருங்கள் நண்பர்களே//
வேலை தேடுவதற்கு உதவும்
இணையதளங்களை கொடுத்துள்ளோம். இந்த தளங்களில்
உங்கள் தகவல்களை பதிவு செய்து உங்கள்
தகுதிக்கும் திறமைக்கும் உரிய
வேலையை பெற்று வாழ்வில் வெற்றி பெற
வாழ்த்துகள்….
www.careerbuilder.co.in
www.clickjobs.com
www.placementpoint.com
www.careerpointplacement.com
www.glassdoor.co.in
www.indtherightjob.com
www.employmentguide.com
www.JOBSTREET.com
www.JOBSDB.COM
www.AE.TIMESJOBS.COM
www.NAUKRIGULF.COM
www.NAUKRI.COM
www.GULFTALENT.COM
www.BAYAT.COM
www.MONSTER.COM
www.VELAI.NET
www.CAREESMA.COM
www.SHINE.COM
www.fresherslive.com
www.jobsahead.com
www.BABAJOBS.com
www.WISDOM.COM
www.indeed.co.in
www.sarkarinaukriblog.com
www.jobsindubai.com
www.jobswitch.in
www.jobs.oneindia.com
www.freshersworld.com
www.freejobalert.com
www.recruitmentnews.in
www.firstnaukri.com
www.freshnaukri.com
www.mysarkarinaukri.com
www.freshindiajobs.com
www.freshersopenings.in
www.freshersrecruitment.in
www.chennaifreshersjobs.com
அரசு வேலைகள் பற்றி அறிந்துகொள்ள::
www.govtjobs.allindiajobs.in
www.timesjobs.com
www.naukri.com
www.tngovernmentjobs.in
www.sarkariexam.co.in
www.govtjobs.net.in
www.indgovtjobs.in
இந்த பதிவை வேலை தேடும் உங்கள்
நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்.

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !

1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன்
குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர
வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது…
2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25
கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்…
3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம்கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக
வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம்
இடது கால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த சிறு வித்தியாசத்தால் தான்…
4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது.
அவனது எலும்பு தொடர்ந்து 4 நாட்களை வரை செயல் படுகிறது. தோல் தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண் மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம் பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம் செயல்படுகிறது. அவனது சிறுநீரகம் தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக
அவனது உயிர் பிரிந் தாலும் அவனது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்
லை…
5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய்ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில் குழந்தை பிறக்கிறது. 28
நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது.
இது தவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பும் சற்று முன்னாடியே (குறை பிரச வம்) அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும்…
6. பகலில் 8 மில்லிமீட்டர் சுருங்கி இரவில் 8 மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம் பகலில் நமது வேலைகள் செய்யும்போது தண்டு வடத்திலுள்ள குறுத்தெலும்பு வட்டுகள் ஈர்ப்பு விசைகாரணமாக அழுத்துகின்றன. இதனால் உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத் தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால் நமது உடம்பின் உயரம் கூடுகிறது…
7. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்து விடும். புது சிவப்பணுக்கள் உருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்…
8. நம் உடலில் சுமார் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன…
9. நமது கைகளில் நடுவிரலில் நகம் வேகமாகவும், கட்டை விர லில் நகம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல் பாரத்தால் கை விரல் நகத்தைவிட கால்விரல் நகம்
மெதுவாக வளர்கிறது…
10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல் தூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப் பக்கம்,
இந்த ப்பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்…
11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக் குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர் கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப் பருமன் 4 முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப் பாதங்களிலும் அமைந்திருக்கிறது…
12.மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித உறுப்பு கட் டை விரல்கள்…
13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம் தாடை எலும்பு…
14. மனித மூளை 80 முதல் 85 சதவீதம் தண்ணீரைக் கொண்டதாகும்…
15. கல்லீரல் 500 விதமான இயக்கங்களை நிகழ்த்துகிறது…
16. நம் ஒடல் தசைகளின் எண்ணிக்கை 630…
17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம் பங்கு ரத்தம் உள்ளது…
18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்த இரண்டு லட்சம் வரை உள் ளன. அவை 1 மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன…
19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம் வயது வரை வளர்கிறது…
20. மனித முகங்களை மொத்தம் 520 வகைகளுக்குள் அடக்கி விடலாம்…
21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ…
22. நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9 லிட்டர் மூச்சுக் காற்றும் உட்கார்ந்திருக்கும் போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும் தேவைப்படுகிறது…
23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள்
ஊறுகாய், உப்புக்கருவாடு, ஆல்கஹால் போன்றவற்றால் பாதிப்படைகிறது…
24.பெண்களைவிட ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது. பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள்
ஆண்கள் மூளையில் இருக்கிறது…
25. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்…
26. நமது தலையின் எடை 3.175 கிலோ கிராம்…
27. மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடைத்து விடும்…
28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க நம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும்
பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த உருவம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள்
கிடை யாது…
29. மூளையின் மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது…
30. மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்…
31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை /கறுப்பு நிறங்களை தவிர வேறு நிற வேறுபாடே தெரியாது…
32. மனித உடலின் தோலின் எடை 27 கிலோ கிராம்…
33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள் உள்ளன…
34. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை,
முழங்காலை மாற்றலாம். ஆனால்
மூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம்
ஞாபங்கள், நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற
முடிந்தாலும், மாற்றப்பட்டவன் வேற்று மனிதன்
தான் அவன் அந்நியன் தான்…
35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க
இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண்
இமைகள் தான் நம் வைப்பர்கள். அவற்றின்
விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும்
போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம்
அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும்
போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந
்து கண்ணீர் வினியோகம் ஆகிறது…
36. நமது உடலிலுள்ள செல்கள்
பிரிந்து இரண்டாகும் தன்மையு டையது.
ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள்
இறந்து புது செல்கள் பிறக்கின்றன…
37. தலைமுடி 2 வருஷத்திலி ருந்து 4 வருஷம்
வரை வளர்கி றது. அதன்பின் 3 மாதம் வளராமல்
இருந்து உதிர்கிறது. பிறகு புது கேசம்
வளர்கிறது…
38. ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54
தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது…
39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின்
இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது.
ஒரு பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம்
ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப்
செய்கிறது. இதயம் சீராக துடிக்க பொறாமை,
கெட்ட சிந்தனை இவைகளை விட்டொழித்தால்
போது ம், உயிர் வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்…
40. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத்
தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத்
திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது…
41. நமது உடலின் நீளமான
எலும்பு தொடை எலும்பு தான்…
42. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500
சொற்கள் என்றும் பேசும் வேகம் நிமிடத்திற்கு 100
சொற்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது…
43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால்
உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின்
வலியை உணர்த்துவது மூளையே…
44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீ தம்
கூடுதலாக வியர்க்கிறது…
45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13
வைட்டமின்கள்…
46. உடலில் ரத்தம் பாயாத
பகுதி கருவிழி மட்டுமே…
47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப் பொருளையும் 11 ஆயிரம் காலன் திரவத்தையும்
உட்கொள்கிறோம்..
48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுரஅங்குலத்திலும் 3000 வியர்வை சுரப் பிகள்
இருக்கின்றன…
49. நம்முடைய தலை ஒரே எலும்பால்உருவானது அல்ல, 22 எலும்புகளில்
உருவானதாகும்…
50. மனித உடலில் 50 லட்சம் முடிக்கால்கள்உள்ளதாகவும், பெண்களின் முடியை விட
ஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என் றும்அறியப்படுகிறது..
.51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில்
தூங்கி விடுகின்றான்…
52. மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டி மீட்டர்…
53. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான். சாதாரண மனிதன்
முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக இவ்வளவு வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்…
54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன…
55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம் வளர்கிறது..
56. நாள் ஒன்றுக்கு நாம் 23,040 தடவை சுவாசிக்கின்றோம்…
57. மனிதனின் உடலிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி)..
58. நாம் பேசக்கூடிய வார்த்தை க்கு 72 தசைகள் வேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால்
சாதனைகளை நிகழ்த்தலாம்..
59. நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும் இரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது.
இவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது…
60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும் வளரும்…
61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன…
62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம்.
63. உடலில் பொட்டாசியம் அளவு 70 சதவீதமாக குறைந்துவிட் டால் அசதி, சோர்வு, வாந்தி,
வயிற்றுப் போக்கு ஏற்படும்.
.64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர்
எச்சிலை ஊறச் செய்கிறான். 1.14லிட்டர்
வியர்வை வெளியிடுகிறான்..
65. சிந்தனையின் வேகம்
அல்லது ஒரு யோசனையின் தூரம்
என்று சொல்லுகிறோம் இந்த தூரம் 150
மைல்களாகும்..
66. ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம்
அதிகமாக துடிக்கிறது…
67. மணிக்கட்டிலிருந்து நடுவிரல்
நுனிவரை உள்ள நீளமும், மேவாய்
கட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள
நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்..
68. ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் 30
கோடி உயி ரணுக்கள் வரை இருக்கும்..
69. உடலில் உண்டாகும் உஷ்ணம்
வெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம் உள்ளது..
70. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல்
முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும்
இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம்
30 செகண்டு ஆகும்..
71. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர்
ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறிய
அறைகளைப் பாதிக்கிறது. இதனால் தான்
மனிதனுக்கு கோபம் வருகிறது…
72. மனித மூளையில் தாமிரத்தின் அளவு 6 கிராம்
ஆகும்.
73. ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதிகமாக
நீரை சுரக்கத் தொடங்கிவிட் டால்
ஆணுக்கு பெண்குணமும்,
பெண்ணுக்கு ஆண்குணமும் ஏற்படும்…
74. தானாக மூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம் ஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது…
75. நம் மூக்கில் வாசனையை நுகரும் செல்கள் 50 லட்சம் உள்ளன. ஆனால் நாயின் மூக்கில்
22கோடி நுகரும் செல்கள் உள்ளன. அதனால் மோப்ப சக்தி அதிகம். காவல் துறையில் வேலை..
76. நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ் தான். அவரவர் கைவிரல் 5 யையும் பொத்திப் பார்த்தால்
என்ன அளவு இருக்குமோ அதே அளவு தான் அவரவர் இதயம் இருக்கும்…
77. நம் நுரையீரலில் உட்புறம் அமைந்துள்ள ‘ஆலவியோலி’ என் னும் சிறிய காற்று அறைகளின்
எண்ணிக்கை மட்டும் 30 கோடியாகும்..
78. மூளை 65 சதவீதம் கொழுப்பு பொருளால்ஆனது..
79. இரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள் உள்ளன..
80. மனிதனுக்கு 3 வகையான பற்கள் உண்டு..
81. நமது நாக்கில் சுவை உணரும் மொட்டுக்கள் 9000 உள்ளன..
82. நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள் உள்ளன.
83. எலும்புகளின் துணை இன்றி தானே அசையும் தசை நாக்கு..
84. மனித உடலில் அதிக செல்களால் உருவான பகுதி மூளை,மூளையின் வெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன் செல்களால் உருவானது..
85. ஒரு மனிதன் தன் தாழ்நாளில் 23 வருஷம் தூங்குகிறான்.
86. ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார் 3-½ லட்சம் கரு முட் டைகளோடு தான் பிறக்கிறாள்.
இந்த முட்டைகளை ஒரு டீஸ் பூனில் 10 லட்சம் நிரப்பலாம்.
87. 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600 மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும்..
88. பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய் சுமார் 375 முறை ஏற் படுகிறது..
89. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1லட்சம் தடவை லப்டப் செய்கி றது. வருஷத்திற்கு 4 கோடி தடவை..
90. நமது தோலின் பரப்பளவு சுமார் 20 சதுரஅடிகள்.
91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக் கொண்டு 20 ஆயிரம் தீக்குச்சிகள் செய்யலாம்..
92. மனித உலின் கார்பனைக் கொண்டு 900 பென்சில்களை உரு வாக்கலாம்.
93. மனித உடலிலுள்ள கொழுப்பைக் கொண்டு 7 பார் சோப்புகளை செய்ய லாம்..
94. மனித உடலின் இரும்பைக் கொண்டு 2 அங்குல ஆணி ஒன்று செய்யலாம்..
95. மனித உடலில் அதிகமாக காணப்படும் தாதுப்பொருள் கால்சியம்..
96. இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட்டர் நீளமுள்ள இரத்த நாளங்களிலி ருந்து இதயம்
வழியே நிமிடத்திற்கு 70 தடவை செல்கிறது…
97. உள் வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன் குறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால
உபரியாக காற்றை உள்வாங்க கொட்டாவி விடுகிறோம்…
98. மனிதன் 21 வயது முடிவதோடு உடலின் எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும்
நின்று விடுகிறது. இறுதிவரை தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான் சின்னதாக.. நம்மால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வளர்ச்சி…
99. 60 வயது வரை மனிதன் வாழுகின்றான் என்றால் அந்த மனிதன் ஒரு நாளைக்கு 10 நிமிடம்
வீணாக்கினால் அவன் ஆயுளில் 5மாதங்கள் வீணாக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது..
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

Sunday, September 13, 2015

நாய்க் கடி ஆபத்தானதா?

நாய்க் கடி என்றால், முதலில் நமக்குத் தெரிய வேண்டிய தகவல், அது நல்ல நாயா, வெறிபிடித்ததா என்பதுதான். வெறிபிடித்த நாய் என்றால் பயந்தடித்துக் கொண்டு சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். சமயத்தில் அந்த நாய்க்கு வெறிநோய் இருப்பது கூட நமக்குத் தெரியாமல் இருக்கலாம். அந்த நாய்க்கு வெறிநோய் ஊசி போட்டிருந்தால் நாம் தப்பித்தோம், இல்லை எனில் பிரச்சினைதான். ஆனால் எப்படியானாலும் நாய்க் கடித்த உடனே அந்த இடத்தை நன்கு கழுவி உடனே மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும். உடனடி சரியான சிகிச்சை கட்டாயம் உயிரைக் காப்பாற்றும். நாயில் குட்டி நாய், பெரிய நாய் என்றில்லை; எந்த நாய் கடித்தாலும் பாதிப்பு ஒன்றுதான். ஆனால் எந்த இடத்தில் கடித்தது என்பதைப் பொறுத்து அதன் பாதிப்பும், நோய் வரும் காலமும் வேறுபடலாம். உங்களுக்கு ஒரு புண் இருந்து, அதில் வெறிநோய் உள்ள நாய் நக்கினால் கூட, நமக்கும் வெறிநோய் வரும் என்பதே உண்மை. அதுதான் அறிவியல்.. அது வேண்டாம் வெறிநோய் பாதிப்புள்ள நாய் லேசாக கீறினால் கூட, லபக்கென்று வெறிநோயின் வைரஸ் அப்படியே நம்மிடம் ஒட்டிக்கொள்ளும். வெறிநோயின் அறிகுறிகள் நம்மிடம் உண்டாகிவிட்டால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது. அது என்னப்பா அப்படி ஒரு ராட்சச வெறிநோய். என்கிறீர்களா?
வெறிநோயின் சுவாரசிய தகவல்கள்..!
வெறி பிடித்த நாயின் கடி/எச்சில் மூலம் வருவதுதான் வெறிநோய்(Rabies). வெறிநோய் வைரசின் பெயர் லைஸா வைரஸ் (Lyssavirus) என்பதாகும். குட்டியூண்டு சைஸ் உள்ள இந்த வைரஸ்தான் வெறிநோயை உண்டுபண்ணுகிறது. ரேபிஸ் (Rabies) என்பது ஒரு லத்தீன் வார்த்தை. இதன் பொருள், பைத்தியம் பிடித்த/சித்த சுவாதீனமற்ற(Rabies=Madness) என்பதாகும். வெறி நோயினால், அள்வுக்கதிகமான மூளை வீக்கம் (encephalitis) ஏற்படும். பின்னர் மூளையின் செயல்பாடுகளை மாற்றியமைத்து கண்டமேனிக்கு வைரஸின் போக்கில் செயல்பட வைக்கும். நமது இயல்பு நிலை பறி போய்விடும். நம்மை இவ்வளவு பாடுபடுத்தும் இந்த வைரஸ் அப்படி என்ன யானை பெரிதா என்றால் இல்லவே இல்லை. ஒரு எறும்பு அளவு என்ன, ஒரு மண் துகள் அளவு கூட இல்லை. மிக மிகச் சிறியது. அதன் நீளம் 180 நானோ மீட்டர். அகலம் 75 நானோமீட்டர். ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில், 100 கோடியில் ஒரு பகுதி.(One nanometre is one billionth of metre (1/1000000000 of a metre, or 0.000000001 m). இந்த லைஸா வைரஸ் ஒற்றை RNA வில், குழந்தையைத் துணியில் சுற்றுவதுபோல் சுற்றி கட்டி வைக்கப் பட்டுள்ளது.
மனிதர்/பாலூட்டியை குறி வைக்கும் வெறிநோய்..!
வெறிநோய் வெப்ப ரத்த விலங்குகளிடம் மட்டுமே-அதாவது பாலூட்டிகளிடம் மட்டுமே - வருகிறது. அதுவும் விலங்குண்ணிகளிடம் மட்டுமே! நகங்கள் உடைய விலங்குகளிடம் மட்டுமே வரும். ஆனால் அது அங்கிருந்து வாய்ப்பு கிடைக்கும்போது, மனிதனிடம் ஒரே பாய்ச்சலாக பாய்ந்து வந்துவிடுகிறது. அது மட்டுமல்ல, இந்த வியாதி ஒரு விலங்கிடமிருந்து இன்னொரு விலங்குக்கும் பரவுகிறது. பொதுவாக இந்த வெறிநோய், வெறிநோய் பாதிப்புள்ள ஒரு விலங்கிலிருந்து (அது நாயாக இருக்கலாம், பூனையாக இருக்கலாம், ஆடாக இருக்கலாம், மாடாகவும் இருக்கலாம்) இன்னொரு விலங்கை/மனிதரைக் கடிப்பதன் மூலமே வருகிறது. ஆனால் அமெரிக்காவில் வௌவால் & பூனைகள் மூலம் வருகிறது. பொதுவாக் இந்நோய் நரி, ராகூன்(raccoons) ஷங்க்(skunks) ஓநாய் மற்றும் கீரிகளிடம் காணப்படுகிறது.
நாய்க்கடிக்கு சிகிச்சை எப்படி?
பொதுவாக மனிதனுக்கு ஏற்படும் வெறிநோய் என்பது அதன் தீவிரமான அறிகுறிகள் ஏற்படும் முன், கடித்த உடனேயே அதற்கான நோய்த்தடுப்பு முறைகளை 48 மணி நேரத்துக்குள் தரவேண்டும். அப்படி நோய்த்தடுப்பு மருந்து தக்க தருணத்தில், வெறிநாய் கடித்தவுடன்/ நாய் கடித்தவுடன் கொடுத்துவிட்டால் கட்டாயம் வெறிநோயிலிருந்து தப்பித்துவிடலாம். ஆனால் உடனடி சிகிச்சை தராவிட்டால் அது உயிர் குடிக்கும் எமனாகவே மாறிவிடுகிறது. வெறி நோய்க்கான வைரஸ் மைய நரம்பு மண்டலத்தையும், முடிவில் மூளையையும் தாக்கி, இறப்பு ஏற்பட பாதை போட்டுத் தருகிறது.
முற்றிய வெறிநோய்!
வாயில் நுரை தள்ளிக்கொண்டிருக்கும் வெறிநோய் முற்றிய வெறிநாயாக இருந்தாலும் கூட, கடித்த 48 மணி நேரத்திற்குள் அதற்கான தடுப்பு மருந்தைப் போட்டு விட்டால் வெறிநோயிலிருந்து நாய் கடித்த நபரைக் காப்பாற்றிவிட முடியும். ஆனால் வெறிநோயின் வைரஸ்கள் நமது நரம்பைத் தொட்டுவிட்டாலோ/வெறிநோயின் வெளிப்பாட்டு அறிகுறிகள் உண்டாகிவிட்டாலோ, காப்பாற்ற முடியாது. நிலைமை ரொம்ப மோசமாகி, கெட்டுப் போய், இறுதியில் சாவு ஒன்றுதான் ஒரே முடிவாக இருக்கும்.
நம்மிடையே நிலவும் மோசமான மூடநம்பிக்கைகள்..!
நம் மக்களுக்கு வெறிநோய் பற்றிய தகவல் எதுவும் தெரியாமலேயே அவர்கள் மனம் போனபடி நாய்க்கடிக்கு மருத்துவம்/மாந்திரீகம்/ நாட்டு மருந்து சிகிச்சை என செய்து கடி பட்டவர்களின் உயிரைப் பணயம் வைத்து பலி கொடுக்கின்றனர். கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களிலும்கூட வெறிநாய்க்கடி பற்றிய விழிப்புணர்வு இல்லாததுதான் வேதனை. படித்தவர்கள் கூட மூடநம்பிக்கையான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கின்றனர். நாய்க் கடித்தவுடன் அதனை சிலர் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். சிலர் உடனேயே நல்லெண்ணெய் முட்டை கொடுத்துவிட்டு மந்திரிப்பவரிடம் அழைத்துச் சென்று மந்திரிப்பார்கள். அவர் என்ன சொல்கிறாரே அதனை மட்டும் வேத வாக்காகக் கேட்பார்கள். அவர் நல்லெண்ணெயில் ஏதோ ஒரு பச்சிலையை பிழிந்து கொடுப்பார். பின்னர் 6 மாதத்துக்கு கோழிக்கறி, பூசணிக்காய் மற்றும் அகத்திக்கீரை சாப்பிடாமல் பத்தியமாக இருந்தால் வெறிநாய்க்கடி சரியாகி விடுமாம். கடித்த உடன் நல்லெண்ணெய், முட்டை கொடுப்பது விஷம் ஏறாமல் தடுப்பதிற்காம். சிலர் நாய்க்கடித்ததும், ஏதோ ஒரு மரத்தைக் கடிக்கச் செய்து, அப்படிச் செய்ததும் நாய்க்கடித்த இடத்திலிருந்து பச்சையாக ஏதோ வழியுமாம். நாய்க்கடியின் விஷம் இறங்கிவிடுமாம். இப்படி ஊருக்கு ஊர் வித்தியாசமான சிகிச்சைகள் உண்டு. ஆனால், கடித்த நாய் வெறிநாயாக இல்லாமல் சாதா நாயாக இருந்தால் பிழைத்துக் கொள்வார்கள். வெறிநாய் என்றால்.. அவ்வளவுதான்...
வெறிநோயின் பயணப்பாதை..!
வெறிநோய் பற்றிய தகவலே நம் வயிற்றில் புளியைக் கரைத்துவிடும். ஆனால் அது பயம் தரும் விஷயம் என்பதற்காக நாம் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா? நமது உயிரைக் காப்பாற்ற வேண்டுமே? வெறிபிடித்த நாய்க்கடி மூலம் நமக்குள் நுழைந்த வைரஸ், அது எந்த இடத்தில் நுழைந்ததோ அதைப் பொறுத்து, அது உடலுக்குள் வேகமாக நரம்பு மண்டலம் வழியே ஜாலியாகப் பயணம் செய்கிறது. பின்னர் இறுதியாக மூளைக்குள் போய் ஜம் என்று உட்கார்ந்துவிடுகிறது. பின்னர் அது ஆடும் ஆட்டம் இருக்கிறதே.. அது சொல்லி மாளாது.
வைரஸின் அதிவேக செயல்பாடு!
மனித உடம்பில் எந்த இடத்தில் நாய்க் கடித்தது என்பதைப் பொறுத்தே, அந்த வைரஸ் எத்தனை நாளில் மத்திய நரம்பு மண்டலத்தைப் போய் அடைந்து, நம் மூளையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, வைரஸ் நம் உடலை ஆட்சி செய்யத் துவங்கும் என்பது தெரியும். அதனை ஒட்டி இதன் அடைகாப்புக் காலம்(Incubation period) சில மாதங்களிலிருந்து ஓராண்டு வரை இருக்கலாம். ஒரு முறை இந்த வெறிநோய் வைரஸ் மைய நரம்பு மண்டலத்திற்குள் காலடி எடுத்து வைத்துவிட்டால், அவ்வளவுதான்.. ! வெறிநோயின் அறிகுறிகள் உருவாகத் துவங்கும். அதன்பின் ஓரிரு நாட்களுக்குள் அதன் பிரச்சினைகளும் சிக்கல்களும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, மிகக் குறைந்த நாட்களிலேயே, அதாவது ஓரிரு நாட்களிலேயே இறப்பு நிகழ்ந்து விடும்.
நோயின் அறிகுறிகள்..!
துவக்க காலத்தில் முதலில் உடல்வலி, பின் தலைவலி அதன்பின் காய்ச்சல் என்று கொஞ்சம் கொஞ்சமாக நோய் முற்றும். பின் பொறுக்க முடியாத வலி உண்டாகும். கட்டுகடங்காத உடல் பிரச்சினை, மன அழுத்தம், நீரைக் கண்டால் பயமும் வெறியும் ஏற்படும். உணவை விழுங்க முடியாது. ஆனால் நீர் வேண்டும் வேண்டும் என்று கத்துவார்கள். அவர்களுக்கு மனப்பிரமை ஏற்படும். ஏராளமாய் பிதற்றுவார்கள். வாயில் எச்சில் அதிகமாக ஊற்றெடுக்கும்; ஒழுகும். மற்றவரைக் கண்டால் நாய் போலவே குரைப்பார்கள், ஓடிவந்து கடிக்க வருவார்கள். உடல் செயல்பாடுகள் வித்தியாசமாக இருக்கும். உடல் உறுப்புகள் சில செயலற்றுப் போய்விடும். பின் உடல் அசையாமை, சித்தம் மாறிய நிலை போன்றவை ஏற்படும். முடிவில் கோமா நிலையாகும். சுவாசிக்க முடியாமையால் உயிர்ப் பிரிதல் நேரிடும்.
வெறிநோய் உருவாக்கும் லைசாவின் தந்திரங்கள்..!
வெறிநோய் வைரசான லைசாவில் உள்ள பிரச்சினை என்னவென்றால், நம் உடலின் படைவீரர்களான இரத்த வெள்ளையணுக்களின் ஒரு பிரிவான லிம்போசைட்டுகளிடம் (Lymphocytes) லைஸா வைரஸ் பெப்பே காண்பித்து நம் உடலுக்குள் நுழைந்துவிடும். பின் அதன் பார்வையிலிருந்து தப்பி மறைந்து வாழும் திறன் உள்ளது இந்த லைஸா வைரஸ். அதனால், இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்தாலும், அதனைக் கண்டுபிடிக்க முடியாததால், உடலுக்குள் நுழைந்த வைரசுடன், போர்வீரர் வெள்ளையணுக்கள் போரிட முடியாது. எனவே, எந்த தற்காப்பு நடவடிக்கையும் நம் உடலால் எடுக்கப்பட மாட்டாது. உடலுக்குள் லைஸா கொலை வெறியுடன் ஜாலியாய் சுற்றி வரும். லைஸா வைரஸ் நம் உடம்பில் நுழைந்த சில நாட்கள்/வாரங்களுக்குள் (நுழையும் இடத்தைப் பொறுத்து, கால் என்றால் சில மாதங்கள், வயிறு என்றால் சில வாரங்கள் வாய்/கன்னம்/நெற்றி என்றால் 10 நாட்களில் ) வெறிநோயின் அடையாளங்களை/அறிகுறிகளை, உடலில் பதிவு செய்யும். சில சமயம் இந்த வைரசின் அடைகாக்கும் திறன் 7 ஆண்டுகள் கூட நீடிப்பதுண்டு.
லைஸா வைரசின் தடுப்பூசி கண்டுபிடிப்பு ..!
லைஸா வைரஸ் எந்த மூலக்கூறு செயல்பாட்டில் (Molicular mechanism ) ஏறிப் பயணம் செய்து தாவிப் பரவுகிறது என்ற தகவல் இதுவரை அறியப்படவில்லை. ஆனால் ஒரு முறை வெறிநோய் அறிகுறிகள் வெளிப்படையாய் தெரிய ஆரம்பித்து விட்டால் போதும். நம்மை இந்த உலகில் எந்த மருத்துவராலும், எந்த சக்தியாலும் எந்த வகையிலும் காப்பாற்றவே முடியாது. இந்த வைரஸ் செல்லுக்குள் தனியான வைரஸ் தொழிற்சாலை (Virus factory) உண்டாக்கி, அதில் தன் பெருக்கத்தைச் செய்யும். அதன் பெயர் நைக்ரி துண்டுகள் (Naigri bodies). இதனைக் கண்டுபிடித்தவர் மேற்கிந்தியத் தீவைச் சேர்ந்த டாக்டர். ஜோசப் லேன்னோக்ஸ் பாவன் என்ற ஒரு பாக்டீரியலாளர்.. (Dr. Joseph Lennox Pawan of Trinidad in the West Indies, a Government Bacteriologist ).இந்த நைகரி உடலை இவர் 1931 ல் வௌவால்களின் மூளையிலிருந்து கண்டறிந்தார்.
லைஸா வைரசின் மோதல்/போர் உடலுக்குள்..!
இந்த வைரஸ் நம் உடலின் இண்டர்பெரானுடன் (interferon) முட்டி மோதி சண்டையிட்டு அதனை தோல்வியுறச் செய்கிறது. உடலின் தற்காப்புத் திறனைக் காலி செய்கிறது. மூளையின் பலவித நடவடிக்கைகளை முடக்குகிறது. அங்கிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவுகிறது. பின் நமது உமிழ் நீர் சுரப்பிக்கும் தாவுகிறது. ஏராளமான உமிழ் நீர் கட்டுக்கடங்காமல் சுரக்கிறது. அந்த உமிழ்நீரில் எக்கச்சக்க வைரஸ் இருக்கும். அத்துடன் வாய் மற்றும் கன்னத்திலும் வைரஸ் கோடிக்கணக்கில் வழியும். எனவே நாய் கடித்து 2 நாளிலிருந்து-5 ஆண்டுகள் வரையிலும் வெளியிலேயே தெரியாமல் அடைகாத்து, இது உடலில் தங்கி, பின்னர் அறிகுறி உண்டாகி முடிவில் இறப்பு ஏற்படலாம். பெரும்பாலான பாதிப்புக்குள்ளான பாலூட்டிகள் கடித்த ஒரு சில வாரங்களிலேயே உலகை விட்டு சென்றுவிடும். ஆனால் ஆப்பிரிக்க கீரி மட்டும், இந்த உடல் உபாதைகளோடேயே பல ஆண்டுகள் வாழ்கின்றன.
வைரசின் வாழ்க்கை முறை..!
வைரசின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வைரஸ் பெருக்கம் செய்ய/உயிர் வாழ கட்டாயமாய் இன்னொரு செல்/உயிர் வேண்டும். வைரஸ் தானே தனியாய் தனித்தியங்கி சுதந்திரமாய் வாழ இயலாது. இன்னொரு செல்/உயிர் கிடைக்கும் வரை வைரஸ் சிவனே என்று காத்துக்கிடக்கும். அந்த காத்திருத்தல் காலம், சில சமயம் 2 ஆண்டுகள்/200 ஆண்டுகள்/2000 ஆண்டுகள் கூட ஆகலாம். அதற்குப்பின்னும் கூட! ஆனால் ஓர் உயிர் மட்டும் கிடைத்துவிட்டால் வைரஸ் டபக்கென்று உயிர்த்தெழுந்து தன் இனத்தை விருத்தி செய்யும்.
உலக நாடுகளில் வெறிநோய் நிலைமை..!
உலகம் முழுவதும் 97% வெறிநோய், நாய்க்கடியிலிருந்துதான் உருவாகிறது. நாய்க்கு வெறிநோய் தடுப்பூசி போடுவதன் மூலம் இந்நோய் வராமல் தடுக்கலாம். நமக்கு வெறிநோய் தடுப்பு ஊசி போடுவதன் மூலம் நம்மை வெறிநாய்க்கடியிளிருந்து 3 ஆண்டுகள் தப்பிக்கலாம். அமெரிக்காவில் விலங்குகள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி மூலம் வீட்டு நாய்களுக்கு வெறிநோய் வருவது கட்டுபடுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் கூட அமெரிக்காவில் வௌவால், பூனை மற்றும் ராகூன் மூலம் வெறிநோய் வருகிறது. ஆஸ்திரேலியா, ஜப்பான்,ஐரோப்பிய நாடுகள் போன்ற நாடுகளில் வெறிநோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த நோய் வௌவால் மூலம் காற்றின் வழியே பரவுகிறதாம்.
வெறிநோய் இறப்பின் தகவல்கள்..!
வெறிநோய் இன்று சுமார் 150 நாடுகளுக்கு மேல் காணப்படுகிறது. உலகம் முழுவதும் வெறிநாய் வாழும் இடங்களில்/வெறிநோய் வரும் வாய்ப்புள்ள இடங்களில் சுமார் 330 கோடி மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் ஆண்டுதோறும் 55,000௦௦௦ மனித உயிர்களைப் பலி வாங்குகிறது வெறிநோய். இந்த இறப்புகளில் 90% ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில்தான் நிகழ்கிறது. இந்தியாவில் மட்டும் ஒரு வருடத்தில் 20,000 பேர் வெறிநோயினால் இறக்கின்றனர். இது உலகில் ஏற்படும் வெறிநோய் சாவுகளில் 36% ஆகும். இறப்பு நிகழ்வில் 40% வெறிநோய் இறப்புக்கள் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கே ஏற்படுகிறது. இவர்களும் கடித்த நாய், வெறிநோய் வந்த நாய் என்று தெரியாமலே கடிபட்டு, பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். ஒரு விஷயம் என்னவென்றால் இந்த வெறிநோய் வியாதி முற்றும் வரை வெளியே தெரியாமல் கமுக்கமாய், அடக்கமாய் உடலுக்குள்ளேயே இருக்கும். வெறி முற்றிய பின்தான் அதன் அறிகுறிகள் வெளியே வெளிப்படும்.
வெறிநோயிலிருந்து காப்பாற்றப்படும் மனித உயிர்கள்..!
ஒவ்வொரு ஆண்டும், உலகில் சுமார் 1 1/2 கோடிப்பேர், நாய்க்கடிக்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்கின்றனர். இதன் மூலம் 32,700 இறப்புக்கள் தடுக்கப்படுகின்றன. இந்தியாவில் பெரும்பாலும் தெரு நாய்கள் மூலமும், சில சமயம் வளர்ப்பு நாய்கள் மூலமும் வெறிநோய் உண்டாகிறது.
வெறிநோயின் ஆதிகால சரித்திரம்...!
வெறிநோய் பற்றிய தகவல் சுமார் 5,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்ததாக பதிவுகள் சொல்கின்றன. கிரேக்கர்கள், ரோமானியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் வெறிநோய் பற்றிய பதிவுகளை களிமண் பலகைகளில் பதிவு செய்து வைத்துள்ளனர். மனிதன் எப்போது நாய் வளர்க்கத் தொடங்கினானோ அப்போதே, வெறிநோய் பாதிப்பும் ஏற்பட்டிருக்க வேண்டும் எனத் தவகல்கள் சொல்லுகின்றன. மனிதனுக்கு நாயுடன்தான் முதலில் பழக்கம் ஏற்பட்டிருந்தது. அதன் ஆதாரமாக, இஸ்ரேலில் ஒரு பெண்ணின் உடலுடன் ஒரு நாயும் சேர்த்து அடக்கம் செய்யப்பட்ட மம்மி கிடைத்துள்ளது. இதன் வயது சுமார் 12,000 வருடங்கள். ஆனாலும் கி.மு 1930களில் எஷ்னுன்னாவின் கோடக்சில்(Codex of Eshnunna)தான் வெறிநோய் பற்றி எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதாவது கியூநிபாரம் எழுத்துக்களில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் நாயின் சொந்தக்காரருக்கு எப்படி வெறிநோய் அறிகுறிகள் உருவாயின என்றும், அதற்கான தடுப்பு முறைகளும் கூட கூறப்பட்டுள்ளன. அதன் பின்னர் கி.மு 800-700௦௦களில் ஹோமர் பாதிப்பு வந்த நாய் பற்றி எழுதி உள்ளார். கி.மு 420களில் கிரேக்க தத்துவஞானியும் வீட்டு விலங்குகளில் வெறிநோய் வந்தது பற்றி குறிப்பிட்டுள்ளார். கி.மு. 400ல் வாழ்ந்த அரிஸ்ட்டாட்டில் நாய்கள் நோயினால பைத்தியம் பிடித்து திரிந்ததாகவும், அவை எரிச்சலோடு மற்ற விலங்குகளை கடித்ததாகவும் எழுதியுள்ளார்.
வெறிநோய்த் தடுப்பு மருந்தும் உயிர் காத்தலும்!
பொதுவாக மனித வெறிநோய் இறப்பு என்பது 1885ல் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை தொடர்ந்து கொண்டே இருந்தது. இதன் தடுப்பு மருந்தை/ செயற்கை எதிர் உயிரியை 1885ல் லூயிஸ் பாஸ்டர் (Louis Pasteur) & எமைலி ரௌக்ஸ் (Emile Roux) என்ற இரு விஞ்ஞானிகளும் இணைந்து வெறிநோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்தனர். இவர்கள் ஏற்கனவே வெறிநோய் வந்து இறந்த ஒரு முயலின் மூளையிலிருந்து செல்களை எடுத்து, அதிலிருந்தே இந்த தடுப்பு மருந்தை தயாரித்தனர். இந்த வகையில் செத்துப்போன வைரஸிலிருந்து தயாரிக்கும் மருந்துதான், புதிய வகையில் நவீனமாய் வளர்த்து தயாரிக்கும் மருந்தைவிட மலிவாக இருக்கிறது.
முன்பெல்லாம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் வெறிநாய் கடித்தால் 23 ஊசிகள் போடப்படும். அதன் பின், 25 ஆண்டுகளுக்கு முன் நாய் கடிக்கு தொப்புளைச் சுற்றி 14 ஊசிகள் போடுவார்கள். அந்த ஊசியின் வலி பிராணன் போய்விடும். பின்னர் 10 ஆண்டுகளுக்கு முன் 7 ஊசிகள் போட்டனர். இப்போது 3 ஊசிகள் மட்டும்தான். வலியும் அவ்வளவாக இருப்பதில்லை. முதல் 2 ஊசி ஒரு வார இடைவெளியிலும், கடைசி ஊசி 3 வாரத்துக்குப் பின்னும் போடுவார்கள்.வெறிநோய்த்தடுப்பு ஊசி சுமார் 3 வருடங்களுக்கு வெறிநோயிலிருந்து பாதுகாப்புத் தரும்.
வெறிநோய்க்கான சிகிச்சை எப்படி?
முதலில் காயம் பட்ட/ கடிபட்ட இடத்தை சுமார் 15 நிமிட நேரம் தொடர்ந்து சோப்புத் தண்ணீர்/சோப்புத்தூள்/ டிங்க்சர் அயொடின் (povidone iodine)/வெறிநோய் வைரஸைக் கொல்லும் பொருட்களால் அந்த இடத்தை தொடர்ந்து கழுவி, வெறிநோய் வைரஸைக் கொல்ல வேண்டும். நிறைய தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். பின் தடுப்பூசிகளை போடவேண்டும். ஊசியை தோள்பட்டையின் டெல்டாய்டு சதையில்(deltoid muscle) தான் போடுவார்கள். பின் ஒரு சில மணித் துளிகளுக்குள் தற்காப்புத் திறனுள்ள வெறிநோய் எதிர்ப்பானாகிய இம்முயூனோ குளோபுலின் (immune globulin) போடவேண்டும். பின் அதற்கு 4-5 தடுப்பூசியும் கடிபட்ட இடத்திற்கருகிலேயே போடவேண்டும். நமக்கு முன்பே வெறிநோய் தடுப்பூசி போட்டிருந்தால், நாய் கடித்த பின் இம்முயூனோ குளோபுலின் போட வேண்டாம். 4 தடுப்பூசி மட்டும் போதும். வெறிநோய் வராமல் இருக்க அதற்கான தடுப்பூசியும் முன்னமேயே போடலாம். வெறிநாயின் வெறிநோய்க்கடியை உடனடியாக கவனித்து அதற்கான சிகிச்சை செய்தால் காப்பாற்றிவிடமுடியும்.
வெறிநோய் இருந்திருக்குமோ என சந்தேகப்படும் நாய் நக்கினால்/உணவு தரும்போது அந்த நாய் நம் உடலை தொட்டால், காயம் இன்றி இருந்தால், எந்த மருந்தும் தரவேண்டியதில்லை.
கடித்த நாய் வெறிநோயுள்ளதோ என சந்தேகித்து, அதன் கடி லேசான பிறாண்டலுடன் இருந்தால், நம் உடலின் மேல் தோல் மட்டும் சுரண்டப்பட்டிருந்தால், இரத்தம் வரவில்லை என்றால், நீங்கள் கவலைப்படவேண்டாம். அதற்கு உடனடியாக தடுப்பூசியும், காயத்தைச் சுத்தம் செய்து, அதற்கான சிகிச்சையும் உடனடியாக செய்ய வேண்டும்.
நாய்க்கடியினால் அதன் ஒற்றைப் பல்/ பல பற்களின் பதிவு உடலில் உண்டானால், தோலுக்குக் கீழே காயம் இருந்தால், உடனடியாக தடுப்பூசியும் போட வேண்டும். பின்னர் வெறிநோயின் இம்முயூனோகுளோபுலினும் போடவேண்டும்; காயத்தை நன்கு துடைத்துவிட்டு அதற்கான சிகிச்சையும் தரவேண்டும்.
வளர்முக நாடுகளில், கடித்த நாய்க்கு தடுப்பூசி போடப்பட்டதா இல்லையா என்ற சந்தேகம் வந்தாலும், வராவிட்டாலும், கட்டாயமாய் சிகிச்சையைத் துவங்க வேண்டும்.
உலக நல நிறுவனத்தின் கூற்றின்படி, வெறிநோய் வந்துவிட்டால் எப்படி 100% இறப்பு என்பது எப்படி நிச்சமோ அதே போல, வெறிநாய் கடித்தபின் சரியான சிகிச்சையினைத் தந்தால் 100% தடுப்பு நடவடிக்கையும், உயிர் காப்பாற்றப்படுதலும் நிச்சயம்.
வெறிநோய் உற்பத்திக்கூடம்..!
இம்முயூனோகுளோபுலின் (Immunoglobulin) எனற தடுப்பு மருந்து உடல் செல்களுக்குள் வெறிநோய் வைரஸ் நுழையவிடாமல் தடுக்கிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் வரை, நீலகிரி மாவட்டத்தின் குன்னோரில் உள்ள பாஸ்டர் நிறுவனம், இந்தியா முழுமைக்கும் வெறிநோய் மருந்து தயாரித்துக் கொடுத்துக்கொண்டிருந்தது. ஆனால் புண்ணியவான் சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ், பெரிய மனது பண்ணி, இந்த நிறுவனத்துக்கு பால் ஊற்றி மூடுவிழா பணியினை மிகுந்த மக்கள் நல நிகழ்வாக நடத்திவிட்டார். அதன் பின் வெறிநோய் தடுப்பூசி பாவப்பட்ட மக்களால் வாங்கமுடியாத அளவுக்கு விலை வானத்தில் பறந்து உயர்ந்துவிட்டது. மக்கள் அரசு மருத்துவமனையையே நம்ப வேண்டி இருக்கிறது. தனியார் மருந்துக்கடைகளில் இதன் விலை ரூ.2,500/= க்கு மேல். இதனை எப்படி ஓர் உழைப்பாளி/ஏழைத் தொழிலாளி வாங்க முடியும்.? .இப்போது தடுப்பூசியின் எண்ணிக்கையும், அதன் வலியும் கூட குறைந்துள்ளது.
உலக வெறிநோய் தினம்..!
செப்டம்பர் 28 என்பது உலக வெறிநோய் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று நாய்களுக்கும், மனிதர்களுக்கும் தடுப்பூசி போடப் படுகிறது. வெறிநோய் பாதுகாப்பு நடவடிக்களை கடைப்பிடிக்க மக்களிடம் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதுவரை உலகில் நிகழ்ந்துள்ள பதிவுகளில், 2005 ம் ஆண்டு விஸ்கான்சன் (Wisconsin) நகரில் ஜென்னா கீஸ் (Jeanna Giese)ஒரு இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த வெறிநோய்தான் குறிப்பிடத்தகுந்தது. வெறிநோய் வந்த துவக்கத்தில் அவரை மருந்த்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது எதிர் உயிரின் தற்காப்பு முறை நன்கு செயல்பட்டு வைரசுடன் போராடி வெற்றி கண்டார். இன்றும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதன் பின் இரண்டு நோயாளிகள், கொலம்பியாவில் 2008 ல் 11 வயதுப் பையனும், கலிபோர்னியாவில் 2011, ஜூலையில் 8 வயது சிறுமியும் மட்டும் அதிசயமாக வெறிநோய் வந்த பின்னரும் பிழைத்திருக்கின்றனர். வேறு நபர்கள் வெறிநோய் வந்து பிழைத்ததாக சரித்திரமே இல்லை.
வெறிநோய் பற்றிய ஆய்வு..!
சமீபத்திய வெறிநோய் பற்றிய கண்டுபிடிப்பு நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. உடலில் வெறிநோய் அடையாளங்கள் உருவான பின், நம் பெரும்பாலான உடல் செல்களில் உள்ள உட்கருவின் டி.என்.ஏ., ஆர்.என்.ஏ.வாக மாற்றப்படுகிறது. ஆனால் இவ்வளவு உருமாற்றம் நடந்தாலும், வெறிநோய் வைரஸ் பெருக்கம் செய்ய இந்த ஆர்.என்.ஏ வின் சிறு பகுதியே பயன்படுத்தப்படுகிறது. என்ன அநியாயம் பாருங்கள். வைரஸ் பல்கிப் பெருக, ஏராளமான புரதம் உருவாக்க, அளப்பறிய ஆர்.என்.ஏ உருவாகி, அதில் கொஞ்ஞூண்டு ஆர்.என்.ஏ மட்டுமே.. பயன்பாட்டுக்காம்.
வெறிநோய் வருவதற்கான சில காரணிகள்..!
ஆசிய நாடுகளில் சில இடங்களில் நாய்க்கறி உண்ணும் பழக்கமும் உள்ளது. இதுவும் கூட வெறிநோய் உருவாக ஒரு காரணம் என்று அறியப்படுகிறது. நம்மிடையே இதுவரை, ஒருவருக்கு வெறிநோய் உள்ள நாய் கடித்ததா என்பதை அறிவதற்கான சோதனை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. வெறிநோய் அறிகுறிகள் வந்த பின்தான் தெரிகிறது. பொதுவாக வெறிநோய் எச்சில் மூலமே பரவுகிறது. மிக அரிதாக வெறிநோய், பாதிக்கப்பட்ட வெறிநோய் உறுப்புகளிலிருந்து வெளியேறி காற்றில் கலந்து அப்படியே நாம் காற்றைச் சுவாசிக்கும்போது உள்ளே நுழைந்து வெறிநோயை உருவாக்குவதும் உண்டு. அதே போல அரிதாக சரியாக வேகவைக்கப்படாத வெறிநோய் வந்த விலங்குகளின் மாமிசத்திலிருந்தும் வர வாய்ப்பு உண்டு.

பலருக்கு தெரிந்தது தான் , தெரியாத சிலருக்காக பகிரவும் (மனமிருந்தால்)

உங்களது உறவினர், நண்பர் யாரேனும்

கிட்னி ஃபெயிலியர், புற்றுநோய் உள்ளிட்ட


 எந்தவொரு கொடிய நோய்களினால் 

பாதிக்கப்பட்டிருந்தாலும்


அவர்களை கீழ்கண்ட முகவரிக்கு அழைத்துச்


 செல்லுங்கள்.


இங்கு நூறு ரூபாய் மட்டுமே வசூலிப்பார்கள்.



எந்த நிலையில் இருந்தாலும் 100% 


குணப்படுத்தி 

விடுகின்றனர்.

முகவரி :- N.S.நாராயணமூர்த்தி,



நரசிபுரா, அனந்தபுரா,


சகாரா வழி, சிமோகா,


கர்நாடகா .


போன் -08183258033


முடிந்த வரை இதை பகிர்ந்து பலரது உயிர்காக்க


 உதவுங்கள்.

மேலும் இது சம்மந்தமான வீடியோ பதிவைப் 


பார்க்க கூகுளில் Shimoga cancer cure என்று டைப்

 செய்தால், முழு விபரமும் 

கிடைக்கப்பெறுவீர்கள்.

Wednesday, September 9, 2015

மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ..




சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.
1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.
2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
எவன் ஒருவன் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.
இது நாங்க சொல்லலைங்க ..!
சாணக்கியர் சொல்லியிருக்கார் ..!!!